பொருளாதார பலத்தால் சில நாடுகள் அடாவடியில் ஈடுபடுகின்றன; நிதின் கட்கரி

தொழில்நுட்பத்தில் அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் பொருளாதார பலம் காரணமாகவே சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடியில் ஈடுபடுகின்றனர் என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரிகளை எதிர்கொண்டு வருகிறது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் அதிக வரி விதிக்கப்படும் வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், நாக்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், நடந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியதாவது: இந்தியா ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியைக் குறைக்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுயசார்பை அடைய வேண்டும்.

தொழில்நுட்பத்தில் அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் பொருளாதார பலம் காரணமாகவே சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடியில் ஈடுபடுகின்றனர். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வளங்கள் நமக்குக் கிடைத்தால், நாம் யாரையும் மிரட்ட மாட்டோம், ஏனென்றால் உலக நலன் மிக முக்கியமானது என்பதை நமது கலாசாரம் நமக்குக் கற்பிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பை இந்தியா எதிர்கொள்ளும் நேரத்தில், சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடி செய்வதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடுமையாக சாடி பேசி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.