புதிய வருமான வரி மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் இன்று அறிமுகப்படுத்தினார்.
பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழமையான வருமான வரிச்சட்டம், 1961ஐ மாற்றும் அம்சமாக, இந்தாண்டு தொடக்கத்தில் லோக் சபாவில் வருமான வரி மசோதா 2025 அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த மசோதா மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இது பற்றி டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆக.8 விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் பிப். மாதம் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி மசோதா, 2025ஐ திரும்ப பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாஜ எம்.பி., பைஜய்ந்த் பாண்டா தலைமையிலான 31 பேர் கொண்ட தேர்வுக்குழு, சட்டத்தில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. நடைமுறையிலுள்ள வருமான வரி சட்டத்தை எளிமைப்படுத்துதல், வரி விகிதங்கள் மற்றும் விலக்குகளில் மாற்றம், வரி தவிர்ப்பைத் தடுக்கும் நடவடிக்கைகள் அவற்றை உள்ளடக்கிய புதிய வருமான வரி சட்ட மசோதா இன்று (ஆகஸ்ட் 11) அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |