பிரதமர் மோடி ஜூலை 27 அன்று அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்தார். முதலாம் ராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசியாவிற்கு கடற்படை பயணம் மேற்கொண்டதன் 1000-வது ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அதே நாளில் ஆடிப்பூரம் திருவிழாவும் நடந்தது. பிரதமர் மோடி வேட்டி, சட்டை என பாரம்பரிய தமிழ் உடையில் சோழீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர், அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த சோழர் கால சிலைகள், சிற்பங்களை பார்வையிட்டு வியந்தார்.
இந்த நிகழ்வின் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதன் விளைவாக, கோவில் தொடர்பாகவும், சோழர்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்த பத்து நாட்களுக்குப் பிறகு, அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், உள்ளூர் பொருளாதாரமும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் இது குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் தினமும் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |