டிரம்புடன் பேசிய விஷயங்கள் மோடியிடம் பகிர்ந்தார் புடின்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் நடத்திய பேச்சு குறித்த விபரங்களை, பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று பகிர்ந்து கொண்டார்.

‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ல் போர் தொடுத்தது.

இந்த போரை நிறுத்த உலக நாடுகள் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றன. உக்ரைன் உடனான போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 15ம் தேதி பேசினார். அமெரிக்காவின் அலாஸ்கா வில் நடந்த பேச்சில் எந்த முடி வும் எட்டப்படவில்லை.

இந்நி லையில், டிரம் புடனான பேச்சு குறித்த தகவல்களை , பிரதமர் நரேந்திர மோடியிடம், தொலைபேசி வாயிலாக அதிபர் புடின் நேற்று பகிர்ந்து கொண் டார்.

இ து குறித்து பிரதமர் மோடி தன் சமூக வலைதளத்தில் கூறுகையில், ‘என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அலாஸ்காவில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு குறித்த தகவலை பகிர்ந்த என் நண் பரான ரஷ்ய அதிபர் புடினுக்கு நன்றி.

‘உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும். நம் தொடர்ச்சியான பேச்சு, பரிமாற்றம் வரும் நாட்களிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என, தெரிவித்துள்ளார்.

இருப்பினும், டிரம்ப் – புடின் இடையே நடந்த பேச்சு குறித்த விபரங்களை பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...