பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் நேற்று பேசினார். அப்போது, உக்ரைன் விவகாரம், மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி, தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் நண்பர் அதிபர் மேக்ரானுடன் மிகச்சிறந்த உரையாடலை நடத்தினேன்.

‘உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடக்கும் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.

‘இந்தியா- – பிரான்ஸ் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம்’ என, தெரிவித்துள்ளார்.

அதே போல், இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான வலுவான உத்தரவாதங்களுடன், நீடித்த அமைதியை நோக்கி நகர்வதற்காக, உக்ரைன் போர் குறித்த நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டோம்.

வர்த்தக பிரச்னைகளில், அனைத்துத் துறைகளிலும் எங்கள் பொருளாதார பரிமாற்றங்களையும், கூட்டாண்மையையும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டோம். இதுவே, எங்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான திறவுகோல்.

கடந்த பிப்ரவரியில், பாரிஸ் நகரில் நடந்த ஏ.ஐ., செயல் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, 2026-ல் டில்லியில் நடக்கவுள்ள அதன் உச்சி மாநாட்டின் வெற்றியை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

பிரான்ஸ் தலைமையில் நடக்கவுள்ள, ‘ஜி – 7’ உச்சி மாநாட்டிற்கும், 2026-ல் இந்தியா தலைமையில் நடக்கவுள்ள, ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டிற்குமான ஏற்பாடுகளில் இணைந்து பணியாற்ற உறுதியேற்றோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...