பலியாகும் அப்பாவி உயிர்கள்; நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதா: தமிழக அரசுக்கு நயினார் கேள்வி

ஒரு நாள் மழைக்கே ஓர் அப்பாவி உயிர் பலியாகும் அளவிற்கு நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதா என்று திமுக அரசுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னை கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழைநீரில், மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததால், பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் பலியான சம்பவம் மனதை பதைபதைக்க வைக்கிறது. இறந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

இந்த கனத்த தருணத்தில் ஒரு கட்சித் தலைவர் என்பதைத் தாண்டி, சாதாரண குடிமகனாக மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. ஒரு நாள் மழைக்கே ஓர் அப்பாவி உயிர் பலியாகும் அளவிற்கு, ஒரு மாநிலத் தலைநகரின் நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதா? அதிலும் சென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்து, கடந்த 7 வாரங்களில் மட்டும் 5 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கையில், ‘விடியல் ஆட்சியில்’ மின்சார வாரியம் விழித்துக் கொண்டு தான் இருக்கிறதா? ஆகஸ்ட் மழைக்கே சென்னை அல்லாடுகிறது என்றால் டிசம்பரில் தலைநகரின் கதி என்ன? மழைநீர் தேங்கினால் என்ன, மின்சாரம் பாய்ந்தால் என்ன, தெருவில் நடந்து செல்லப்போவது ஏழை, எளிய மக்கள் தானே, எக்கேடு கெட்டால் என்ன என்ற அலட்சிய எண்ணமா?

‘தமிழகத்தின் இதயத்துடிப்பு சென்னை’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின்,இதயத்தின் மீது விழும் எலெக்ட்ரிக் ஷாக்கையும் கவனிக்க வேண்டும்! மறைந்த தூய்மைப் பணியாளரின் குழந்தைகள் அழும் கதறலொலியைக் கேட்ட பின்னராவது, விளம்பரத்தையும் சமூக வலைத்தளத்தையும் விட்டு வெளியே வந்து, இது போல மேலும் பல உயிர்கள் காவு வாங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, மழைக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...