எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்: பிரதமர் மோடி திட்டவட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த வரிகளை மறைமுகமாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்’ என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று உலகில், அனைவரும் பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்ட அரசியல் செய்வதில் மும்முரமாக உள்ளனர். இந்த ஆமதாபாத் மண்ணிலிருந்து, எனது சிறு தொழில் முனைவோர், எனது சிறு கடைக்காரர் சகோதர சகோதரிகள், எனது விவசாய சகோதர சகோதரிகள், எனது கால்நடை வளர்ப்பு சகோதர சகோதரிகளுக்கு சொல்கிறேன்.

உங்கள் நலன்கள் எனக்கு மிக முக்கியமானவை. சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு எந்தத் தீங்கும் ஏற்பட எனது அரசாங்கம் ஒருபோதும் விடாது. எவ்வளவு அழுத்தம் வந்தாலும், தாங்கும் வலிமையை நாங்கள் தொடர்ந்து அதிகரிப்போம். எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்.

பயங்கரவாதிகளையும் அவர்களின் எஜமானர்களையும், அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும், இந்தியா விட்டுவைக்காது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எவ்வாறு பழி வாங்கியது என்பதை உலகம் கண்டது. பயங்கரவாதிகளை வெறும் 22 நிமிடங்களில் பாதுகாப்பு படையினர் அழித்தார்கள்.

நாங்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் உள்ளே சென்று பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம். குஜராத்தில் அனைத்து வகையான தொழில்களும் விரிவடைந்து வருகின்றன. நமது மாநிலம் உற்பத்தி மையமாக மாறியிருப்பதைக் கண்டு முழு குஜராத்தும் பெருமை கொள்கிறது. ஆமதாபாத் நாட்டின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...