7 ஆண்டுக்கு பிறகு பயணம்; ஆகஸ்ட் 31ல் சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி

ஏழாண்டுக்கு பிறகு முதல் முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 31ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.

சீனாவின் தியான்ஜினில் ஆகஸ்ட் 31ம் தேதி நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனால், அவர் 7 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இரு தரப்பு உறவுகள் தொடர்பான சந்திப்பை நடத்துவார்.

இந்த சந்திப்பில், இந்தியா-சீனா உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை நடக்கும் என தெரிகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே சீர்கெட்டுள்ளது. இதனால் இந்த சந்திப்பு உலகம் முழுவதும் இந்தியா – சீனா இடையிலான சந்திப்பு உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது .

ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் இரண்டு நாள் உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடின் உட்பட 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் பங்கேற்கின்றனர். மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்

2020ம் ஆண்டு எல்லை மோதல்களைத் தொடர்ந்து பதட்டங்களைத் தணிக்க, இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மோடியின் முதல் சீனப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...