2026ல் முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப் போகிறார்: அண்ணாமலை திட்டவட்டம்

”2026ல் முதல்வர் நாற்காலியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அமரப் போகிறார்” என்று, மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.

சென்னையில் நடந்த மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: மூப்பனார் வழியில் நேர்மையான அரசியலை தமிழக மண்ணில், இந்திய மண்ணில் கொடுப்பதற்கு நாம் எல்லோரும் ஆயத்தமாக வேண்டும். 2026ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் நிச்சயமாக மாற்றம் வேண்டும் என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

சாமானிய மனிதர்களில் இருந்து குறிப்பாக டீ கடையிலிருந்து ரோட்டில் எங்கு போனாலும் மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். இன்றைக்கு நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் முன்னாள் முதல்வர் இபிஎஸ் இந்த மேடையில் இப்பொழுதுதான் பேசிவிட்டு போய் இருக்கிறார்கள்.

2026ல் முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப் போகிறார். அந்த நாற்காலியில் நிச்சயமாக 2026ல் மாற்றம் வரட்டும். ஒரு புதிய புரட்சி வரட்டும். ஏழை மக்களுக்கு எல்லாம், 2026ல் மாற்றம் வரட்டும். ஏழை மக்களுக்கு எல்லாம் அரசு விடிவெள்ளியாக செயல்பட வேண்டும்.

ஜி.கே.மூப்பனார் மேலே இருந்து நம்மளை பார்த்து கொண்டு இருப்பார்கள். நிச்சயமாக அவரது ஆசை 2026ம் ஆண்டு தேர்தலில் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மேடையில் இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...