வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: முதல்வரை சாடிய நயினார் நாகேந்திரன்

”அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேஜ கூட்டணியில் தான் தொடர்ந்து இருக்கிறார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்” என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த லோக்சபா தேர்தலில் எங்களோடு கூட்டணியில் இருந்துதான் போட்டியிட்டார். இன்று வரையிலும் அவர் எங்களுடன் தான் பயணிக்கிறார். எனவே, அவர் எங்கள் கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை.

முதல்வர் ஸ்டாலின், பல லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று இருப்பதாக கூறுகிறார். இதற்கு முன்பும் அவர் அமெரிக்கா, ஐரோப்பா எனப் பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.

அப்போது, அந்தப் பயணங்கள் மூலம் வந்த முதலீடுகள் எவ்வளவு, போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன்.

ஆனால் அந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. இப்போதும் அவர் வெளிநாடு சென்றிருக்கிறார். வழக்கம் போலவே, இந்த முறையும் அவர் எந்த முதலீட்டையும் கொண்டு வராமல் சும்மாதான் திரும்பி வருவார்.

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதுகுறித்து நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.