ஓட்டுக்காக படித்த பட்டதாரிகளையே ஏமாற்றும் திமுக; நயினார் நாகேந்திரன்

ஓட்டுக்காக படித்த பட்டதாரிகளையே திமுக கூசாமல் ஏமாற்றுவதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

தமிழகத்தில் அனைத்து மாணவர்களின் கல்விக்கடனும் ரத்து செய்யப்படும் என்று சொன்னீங்களே முதல்வர் ஸ்டாலின் அதை செஞ்சீங்களா.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக இளைஞர்களின் ஆதரவை அறுவடை செய்யும் நோக்கில், தமிழகக் கல்லூரிகளில் பயில்வதற்காக வங்கிக் கடன் பெற்ற 30 வயதுக்குட்பட்ட அனைத்து இளைஞர்களின் கல்விக்கடனையும் அரசே திருப்பி செலுத்தும் என வாக்குறுதி எண் 159 இல் தெரிவித்து, ஆட்சி அமைத்தவுடன் அதை அப்படியே கமுக்கமாக மூடி மறைத்துவிட்டது. தங்களை நம்பி வாக்களித்த மாணவர்களையும் இளைஞர்களையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டது.

ஒரு கண்ணிற்கு வெண்ணெய்யும், மறு கண்ணிற்கு சுண்ணாம்பும் வைப்பது போல, தங்களது புதல்வர்களின் இளமைக் காலத்திலேயே அவர்களுக்கு அனைத்து அதிகாரமும், பேரும், புகழும் கிடைத்துவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்படும் திமுக தலைவர்கள், தமிழக இளைஞர்களைத் தொடர்ந்து வஞ்சிப்பது ஏன்?

கொடுத்த வாக்குறுதியின் படி லட்சக்கணக்கான அரசு காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல், கல்விக் கடனையும் ரத்து செய்யாமல், அரசுக் கல்லூரிகளையும் முறையாகப் பராமரிக்காமல் வதைக்குமளவிற்கு தமிழக இளைஞர்கள் மீது திமுகவிற்கு அப்படியென்ன வன்மம்?

ஓட்டுக்காக படித்த பட்டதாரிகளையே இப்படி கூசாமல் ஏமாற்றும் திமுக, படிக்காத பாமர மக்களை என்னவெல்லாம் கூறி, மடைமாற்றி தங்களின் மாயைக்குள் சிக்க வைத்திருக்கும்?

இவ்வாறு, வெறும் பொய் பித்தலாட்டங்களால் கட்டமைக்கப்பட்ட திமுக எனும் கட்சி தமிழகம் எனும் புனித பூமியை ஆளலாமா? அதை நாம் அனுமதிக்கலாமா?

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...