தில்லி ‘செமிகண்’ மாநாட்டில் உலகத்தலைவர் பேசுகையில் மனம் ஆழமாய் யோசித்துக் கொண்டிருந்தது.
இவர் என்ன மாமனிதரா இல்லை அவதார புருஷரா?
75 வயதில், நேற்றிரவுதான் ஜப்பான், சீன சுற்றுப்பயணம் முடித்து திரும்பியுள்ளார். செமிகண்டக்டர்களின் முக்கியத்துவம் குறித்து அத்தனை தரவுகளோடும், ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர்களோடும் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
எத்தனைதான் உதவியாளர்கள் உதவினாலும், இது சாத்தியம் இல்லையே? எப்படிப்பட்ட மனிதர் இவர்?
தமிழகம் வந்து தமிழர்களே கூட அறிந்திராத ராஜராஜ சோழன் குறித்த வரலாறு குறித்து பேசுகிறார். தெலுங்கானாவில் ராமானுஜர் சிலை திறந்து வைத்து விஷிஷ்டாத்வைதம் குறித்து பேசுகிறார். காஷ்மீரில் ஆதிசங்கரர் குறித்தும், பஞ்சாபில் சீக்கிய குருக்கள் குறித்தும், மன் கி பாத்தில் நிகழ்ச்சிகளில் சாதாரண மனிதர்களின் வாழ்வியலுக்கு தேவையான மிகப்பலவற்றை குறித்தும், விவசாய மாநாட்டில் விவசாய நுட்பங்கள் குறித்தும், சந்து சந்தாக உள்ளூர் அரசியல், நாட்டு நடப்பு குறித்தும் பேசுகிறார்.
இப்படி இவர் பேசாத விஷயங்களே இல்லை. அத்தனை ஒரு ஆழமான, அகலமான அறிவுத்திறன். பல தசாப்தங்களாக பல நிபுணர்களின் ஞானத்தை அறிவுப்பசியோடு, பொறுமையாக கேட்டுப்பெற்ற கேள்வி ஞானம்தான் இவரை ஞானப் பொக்கிஷத்தின் கருவூலமாக மாற்றி இருக்க வேண்டும்.
ஒன்று மட்டும் உண்மை. இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து தலை நிமிர்ந்து நிற்கும் வளர்ந்த இந்தியாவின் விதைகள் இந்த மாமனிதனால் விதைக்கப் பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை விட என்ன பெருமை இருக்க இயலும்
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |