உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

உடல் நலனைப் பேணுவதில் தனக்கு முன்னோடியாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக நடிகர் மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார்.

தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிலிந்த் சோமன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உடல் ஆரோக்கியம் குறித்து அவர் பேசியதாவது,

உடல் நலன் என்பது வாழ்வின் அனைத்துவிதமான அழுத்தங்களிலும் துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கும் மனநிலையாகும்.

நீங்கள் செய்ய வேண்டியதை உங்களால் செய்ய முடிந்தால், அதுதான் உண்மையான உடற்தகுதியின் அளவுகோல். பைசெப்ஸ் அல்லது சிக்ஸ் பேக் வைத்து வயிற்றுப் பகுதியை உருவாக்குவது மட்டுமே உடற்தகுதி அல்ல.

நாடு முழுவதும் 10 லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள ஒருங்கிணைந்துள்ளனர். இது தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் இத்தனை நபர்கள் உடல்நலனை பேணுவதற்காக ஒன்றுகூடுவது இதுவே முதல்முறை.

இதுபோன்ற அதிக முன்னெடுப்புகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒருமுறை செய்துவிட்டு விட்டுவிடக்கூடாது. இதனைத் தொடர வேண்டும். உடல் நலனைப் பேணுவதில் பிரதமர் நரேந்திர மோடி முன்னோடியாக உள்ளார். நான் அவரின் ரசிகன் மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அவரை முன்னுதாரணமாகக் கருதுகிறேன். தற்போது, போதைப் பொருள்களுக்கு எதிராக நாடு ஒன்றிணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி செப். 21ஆம் தேதி நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 இடங்களில் 10,000 – 15,000 நபர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். அதாவது, ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்று நடக்கவுள்ளனர். இது நாட்டிலேயே மிகப்பெரிய மற்றும் பிரமாண்ட நடைப்பயிற்சி என்ற சாதனையை படைக்கவுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...