சிறந்த துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இருப்பார்: பிரதமர் மோடி

தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை( செப்.,09) நடைபெற உள்ளது. இதில் எப்படி செயல்படுவது என்பது குறித்து பாஜ எம்பிக்களுக்கு பயிற்சி நடந்தது. இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேஜ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: டில்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றேன். இதில் தேஜ கூட்டணி குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி. ராதா கிருஷ்ணன் அனைவரிடமும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர் சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்றும், தனது அறிவு மற்றும் நுண்ணறிவால் துணை ஜனாதிபதி பதவியை வளப்படுத்துவார் என்றும் மக்கள் நம்புகிறார்கள். இவவாறு அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக வெளியான தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: உள்நாட்டு பொருட்களை ஊக்குவிக்க தேசிய ஜனநாயக எம்பிக்கள், ‘சுதேசி மேளா’விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்பாக வர்த்தகர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். மத்திய அரசு எடுத்த ஜிஎஸ்டி குறைப்பு மூலம் ஒரு அலை உருவாகி உள்ளது. இதனை கூட்டங்கள் நடத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேட் இன் இந்தியா தயாரிப்பை ஊக்கப்படுத்த எம்பிக்கள் தங்களது தொகுதிகளில் சிறப்பு கண்காட்சியை நடத்த வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலில் எம்பிக்கள் அனைவரும் தங்களது ஓட்டை சரியான முறையில் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு ஓட்டும் வீணாகக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...