பார்லியில் இயற்றப்படும் சட்டத்தை நிராகரிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு

”எந்தவொரு சட்டமும் பார்லிமென்டில் இயற்றப்படும்போது, ​​அதை நிராகரிக்க முடியாது. இதைத்தான் இன்று சுப்ரீம்கோர்ட் அங்கீகரித்துள்ளது” என பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: வக்ப் திருத்தச் சட்டம் குறித்த முழுமையான விசாரணைக்குப் பிறகு இன்று சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். சுப்ரீம்கோர்ட்டிற்கு முழு விஷயமும் தெரியும். மத்திய அரசு வழக்கறிஞர் சட்டத்தின் விதிகள் மற்றும் நோக்கங்களை சுப்ரீம்கோர்ட்டில் விரிவாக முன்வைத்துள்ளார். அதன்படி ஜனநாகத்திற்கு மிகவும் நல்ல முடிவை சுப்ரீம் கோர்ட் எடுத்துள்ளது.

எந்தவொரு சட்டமும் பார்லிமென்டில் இயற்றப்படும்போது, ​​அதை நிராகரிக்க முடியாது. இதைத்தான் இன்று சுப்ரீம்கோர்ட் அங்கீகரித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் நான் திருப்தி அடைகிறேன். பீஹார் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் சமீப காலங்களில் காங்கிரஸும், ஆர்ஜேடியும் செய்து வரும் மிகவும் கீழ்த்தரமான அரசியலால் நாங்கள் அனைவரும் வருத்தப்படுகிறோம்.

குறிப்பாக, அவர்கள் பல ஆண்டுகளாக பிரதமரை தனிப்பட்ட முறையில் தாக்கி, துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். ஆனால் பிரதமரின் தாயார் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் விமர்சனத்தால் நாட்டு மக்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...