மோடிக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் டிரம்ப்

இன்று 75வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதிபர் டிரம்பின் அபரிமிதமான வரி விதிப்பு கொள்கையால், இந்தியா – அமெரிக்கா உறவில் சமீபத்தில் கசப்புணர்வு ஏற்பட்டது. இந்நிலையில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியா – அமெரிக்கா இடையிலான நேர்மறையான வர்த்தகப் பேச்சு நேற்று துவங்கியது. இந்த பேச்சு துவங்கிய சில மணிநேரங்களுக்குப் பின், டிரம்ப் – மோடி இடையே போன் உரையாடல் நடந்தது.

இது குறித்த தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்புக்கு நன்றியை தெரிவித்துள்ளார். அதில், ”எனது நண்பர் அதிபர் டிரம்ப் அவர்களே… எனது 75வது பிறந்தநாளில் உங்கள் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

உங்களைப் போலவே, நானும் இந்தியா – -அமெரிக்கா இடையே விரிவான மற்றும் உலகளாவிய நட்புறவை, புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதில் உறுதியாக உள்ளேன்,” என தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போருக்கு அமைதியான தீர்வு காண டிரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.

வரி விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியா அமெரிக்க இடையே எதிர்மறை கருத்துக்கள் எழுந்தன, , ‘நான் எப்போதுமே மோடியுடன் நண்பராக இருப்பேன்’ எனக் கூறினார் டிரம்ப். இதற்கு, டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவ தாக பிரதமர் மோடி பதில் அளித்தார்.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் டிரம்ப் .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...