கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில், வாக்குத்திருட்டில் ஈடுபட்டுதான் காங்கிரஸ் 2023 பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றதா என்று பாஜக எம்.பி. அனுராக்தாக்குர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் ஆலந்துதொகுதியில் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக ராகுல் குற்றம்சாட்டிய நிலையில், பாஜக இந்தகேள்வியை எழுப்பியிருக்கிறது.
இன்று காலை புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கர்நாடகமாநிலம் ஆலந்து தொகுதியில் நடந்த வாக்குத் திருட்டு குறித்து சான்றுகளுடன் முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்துப்பேசிய அனுராக் தாக்குர், ராகுல் சொன்னது போல, ஹைட்ரஜன் குண்டை, அவர் தன்மீதே போட்டுக்கொண்டுள்ளார் என்றும், தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்தான் வென்றுள்ளார். எனவே, காங்கிரஸ்கட்சி வாக்குத் திருட்டில் ஈடுபட்டுத்தான் வெற்றி பெற்றுள்ளதா? என அனுராக் தாக்குர் கேட்டுள்ளார்.
ராகுல் காந்தி, செய்தியாளர் சந்திப்பின்போது, தான் ஜனநாயகத்தைக் காக்க இங்குஇல்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார், காப்பது அவரது இலக்கு இல்லையென்றால் அழிப்பதுதான் இலக்கா? டூல்கிட் உதவியோடு, அவர் நமது அரசியலமைப்பை தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |