வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி

வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம், இன்று முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்தது. இதனால், வேளாண் பொருட்கள், குழந்தைகளின் கல்விக்கு தேவையான பொருட்கள், ஏசி, டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைகிறது.

இந்நிலையில் இன்று (செப் 22) சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நவராத்திரி பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் வலிமை, நம்பிக்கையை கொண்டு வரட்டும். நவராத்திரி சிறப்பு வாய்ந்தது. ஜிஎஸ்டி குறைப்பு கொண்டாட்டத்துடன், சுதேசி மந்திரமும் இந்த நேரத்தில் புதிய சக்தியை பெறும்.

ஜிஎஸ்டி குறைப்பு கொண்டாட்டத்துடன், சுதேசி மந்திரமும் இந்த நேரத்தில் புதிய சக்தியை பெறும். மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். வளர்ந்த, தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கிய உறுதியை அடைய நாம் ஒன்றிணைவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பஜனை வீடியோ ஒன்றை வெளியிட்டு, மற்றொரு பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

நவராத்திரி என்பது பக்தியை பிரதிபலிக்கிறது. இந்தநேரத்தில், பண்டிட் ஜஸ்ராஜ் ஜியின் ஆத்மார்த்தமான ஒரு பாடலைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நீங்கள் ஒரு பஜனை பாடியிருந்தால் அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஒன்றைப் பாடியிருந்தால், தயவுசெய்து அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வரும் நாட்களில் அவற்றில் சிலவற்றை நான் பதிவிடுவேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.