மொராக்கோவில் இந்திய ராணுவ தளவாட ஆலை உற்பத்தியை துவக்கி வைத்தார் ராஜ்நாத் சிங்

வட ஆப்ரிக்கா நாடான மொராக்கோவுக்கு நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். அங்கு, ‘டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்’ சார்பில், பெர்ரெசிட் என்ற இடத்தில் ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் உற்பத்தியை நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மொராக்கோ ராணுவ அமைச்சர் அப்தெல் லத்தீப் லவுடியும் இணைந்து துவக்கி வைத்தனர்.

ஆப்ரிக்க கண்டத்தில், இந்திய ராணுவத்துக்காக 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் முதல் முறையாக இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. தவிர இது தான் மொராக்கோவின் மிகப் பெரிய ஆலை.

மொராக்கோ அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ‘டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்’ நிறுவனம், ராணுவ கவச வாகனத்தை உற்பத்தி செய்யும். முதல் கட்ட வாகனங்கள் டெலிவரி அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலை அமைப்பதற்கான திட்டங்கள் முன்கூட்டியே முடிந்ததால், மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே இந்த ஆலை இயங்க தொடங்கி விட்டது. இதனால், உற்பத்தியும் துவங்கியுள்ளது.

‘ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூட்டமைப்புடன், நவீன ரக ராணுவ கவச வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கும் இருக்கிறது என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலும், ஒரு இந்திய தனியார் நிறுவனம் ராணுவ தளவாட உற்பத்திக்காக வெளிநாட்டில் ஆலை அமைத்திருப்பது இதுவே முதல் முறை’ என, டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆலையில் உற்பத்தியை துவக்கி வைத்த பின் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தற்சார்பு என்ற இந்தியாவின் தொலைநோக்கு பார்வை, உள்நாட்டு தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வது அல்ல, மாறாக உயர்தரமான நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட உறுதியான பொருட்களை தயாரித்து, உலக நாடுகளுக்கும் வழங்குவது தான்.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்துடன் ‘மேக் வித் பிரெண்ட்ஸ்’ என்ற கொள்கையையும் இந்தியா வகுத்துள்ளது. அதற்கு மொராக்கோவில் துவங்கப்பட்ட இந்த ஆலையே சிறந்த உதாரணம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...