நாட்டை கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார்.

இந்த விழா​வில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்​கிரஸ் கட்சி நாட்டை கொள்​ளை​யடிக்​கிறது’ என்று குற்​றம் சாட்டி உள்​ளார். ஒடி​சா​வில் முதல்​வர் மோகன் சரண் மாஜி தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. அந்த மாநிலத்​தின் ஜார்​சுகுடா நகரில் நேற்று அரசு நலத்​திட்ட விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் 4 கோடி ஏழை குடும்​பங்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்டு உள்​ளன. இந்த திட்​டத்​தில் ஒடி​சா​வில் மட்​டும் 40,000 ஏழை குடும்​பங்​கள் பயன் பெற்​றுள்​ளன. ஒடி​சா​வில் புதி​தாக 2 செமி கண்​டக்​டர் ஆலைகள் அமைக்க மத்​திய அரசு அண்​மை​யில் ஒப்​புதல் வழங்​கியது. இதன்​மூலம் ஒடிசா இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

கப்​பல் கட்​டு​மான திட்​டத்​துக்​காக மத்​திய அரசு சார்​பில் அண்​மை​யில் ரூ.70,000 கோடி திட்​டம் அறிவிக்​கப்​பட்​டது. இந்த திட்​டத்​தின் கீழ் ஒடி​சா​வில் கப்​பல் கட்​டு​மான தளம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் ஏராள​மான இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். மத்​தி​யிலும் நாடு சுதந்​திரம் அடைந்​தது முதல் காங்​கிரஸ் கட்​சி, நாட்டை கொள்​ளை​யடித்து வந்​தது. கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் பாஜக ஆட்சி அமைக்க மக்​கள் வாய்ப்பு வழங்​கினர். இதன் மூலம் காங்​கிரஸின் கொள்ளை தடுத்து நிறுத்​தப்​பட்​டது.

கடந்த காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் அத்​தி​யா​வசிய பொருட்​கள் மீது அதிக வரி விதிக்​கப்​பட்​டது. உதா​ரண​மாக ஒரு குடும்​பத்​தில் ஓராண்​டுக்கு ரூ.1 லட்​சம் செலவு செய்​தால், ரூ.25,000 வரி செலுத்த வேண்​டிய சூழல் இருந்​தது. பாஜக ஆட்​சிக் காலத்​தில் இந்த வரி ரூ.5,000 ஆக குறைந்​திருக்​கிறது. இதன்​மூலம் ஏழை, நடுத்தர வர்க்க மக்​கள் மிகுந்த பலன் அடைந்​துள்​ளனர்.

காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் மக்​களின் பணம் கொள்​ளை​யடிக்​கப்​படு​கிறது. எனவே காங்​கிரஸ் மற்​றும் அதன் கூட்​டணி கட்​சிகளிடம்​ இருந்​து பொது​ மக்​கள்​ வில​கி இருப்​பது நல்​லது. திருப்பதி, பாலக்காடு உள்ளிட்ட 8 ஐஐடிகளில் ரூ.11,000 கோடி யில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் இந்த ஐஐடிகளில் கூடுதலாக 10,000 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர தெரிவித்தார். இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...