அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டம்: பிரதமர் மோடி வரவேற்பு

அமெரிக்க அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காசா போர் நிறுத்தத்துக்கான விரிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டார் என நிருபர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் போர் நிறுத்த யோசனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

”காசா போர் நிறுத்தம் குறித்த அதிபர் டிரம்பின் விரிவான திட்டத்தை வரவேற்கிறோம். அதிபர் டிரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால மற்றும் நிலையான அமைதியை வழங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் திட்டங்களை வரவேற்று எட்டு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் டிரம்பின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...