திமுகவை வீழ்த்துவதுதான் நோக்கம்

தவெகவுக்கு பாஜக அடைக்கலம் தருகிறது என கூறுவது அபத்தம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் செயல்படும் மருந்துதயாரிப்பு நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து உட்கொண்ட 11 குழந்தைகள் உயிரிழந்தது மிகவும் வேதனைக்கு உரியது. இது குறித்து ராஜஸ்தான் மற்றும் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு புலனாய்வுக்குழு காஞ்சிபுரத்துக்கு வருகை தந்துள்ளது. மருந்து கெட்டுப் போகவில்லை, தேவையில்லாத பொருளை உள்ளே கலந்துள்ளதால் விஷமாக மாறிஉள்ளது. விசாரணை முடிவில்தான் உண்மை காரணம் தெரியவரும்.

தமிழக ஆளுநர் கேட்கக்கூடிய கேள்விகள் சரியானது. தமிழ்நாடு யாருக்கு எதிராகபோராடும் என்றுதான் அவர் கேட்டுள்ளார். திமுகவினர் வேண்டும் என்றே மக்களை தூண்டிவிட்டு மக்களிடத்தில் போராட்டத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆளும்கட்சி செய்யவேண்டிய வேலையே இல்லை. தமிழக முதல்வர், ஆளுநரை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல.

கரூர் விவகாரத்தை பொறுத்தவரை விஜய்மீது வழக்குப்பதிவு செய்து முதல் குற்றவாளி என்றால் வழக்குநிற்காது. அல்லு அர்ஜூன் சம்பவத்தை உதாரணமாக எடுத்து கொள்ளலாம். அரசியல் ஆசைக்காக கைதுசெய்யலாம், ஓர்இரவு சிறையில் வைக்கலாம். மறுநாள் வெளியே வந்து விடுவார்கள். கரூர் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய்யை குற்றவாளியாக மாற்ற நினைத்தால், அதுமுடியவே முடியாது. அரசியலுக்காக சிலர் இதை பேசி கொண்டுள்ளனர்.

திருமாவளவன் கட்சியில் இருந்து திரளானோர் வெளியேறுவதை கண்கூடாக பார்க்கிறார். அந்த எரிச்சலில் தான் திடீரென்று விஜய், மத்திய அரசு குறித்து பேசி கொண்டுள்ளார். தமிழக வெற்றிகழகத்தை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு இல்லை. எந்தக்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியால் நசுக்கப்படும்போது நாங்கள் நிச்சயம் எங்களுடைய கருத்துகளை பதிவு செய்வோம்.

எப்ஐஆர் மீதே அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. அந்தக் கட்சியில் இருக்கக் கூடிய ஒருவர் ‘ஜென் ஸீ’ புரட்சிகுறித்து பேசுகிறார். அவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகத்துக்கு பாஜக அடைக்கலம் கொடுக்கிறார்கள் என திமுக எப்படிகூற உரிமை உள்ளது. தவெகவுக்கு பாஜக அடைக்கலம் தருகிறது என கூறுவது அபத்தம்.

பாஜக தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள். நாம் ஒருவித்தியாசமான கட்சியை சேர்ந்தவர்கள். கோவை சம்பவம் குறித்து என் கவனத்துக்கு கொண்டு வந்த ஊடக நண்பர்களுக்கு நன்றி. சம்பந்தப்பட்ட மூன்றுபேரில் ஒருவர் கட்சியில் உள்ளார். அவரை நான் இதுவரை சந்தித்தது கூட இல்லை. பாதிக்கப்பட்ட நபருக்கு மன உளைச்சல் ஆக இருந்தாலும் நான்மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் காவல் துறை யினர் விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்ட அவிநாசி சாலையில் திறக்கப்பட உள்ள மேம்பாலம். தமிழ்நாட்டில் பெரிய பாலம் தென்னிந்தியாவில் 3-வது பெரிய பாலம். போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். கும்பமேளாவில் நடந்ததுயரம் போன்ற வட மாநில சம்பவங்களுக்கு கனிமொழி போன்ற எம்.பி-க்கள் செல்லவில்லையா? உங்கள் கூட்டணியில் உள்ள ராகுல்காந்திக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? மணிப்பூருக்கு ராகுல் காந்தி சென்றதை ஏன் ஸ்டாலின் தவறு என கூறவில்லை.

அஸ்ரா கார்க் நேர்மையான அதிகாரி. அவரின் தலைமையில் சிறப்பு புனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் வந்தார் பார்த்தார், பேசினோம். இதில்விமர்சனங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. இதனால் எந்தபிரச்சனையும் இல்லை. டிடிவி என் நடவடிக்கை குறித்தும் விமர்சித்துள்ளார். அது அவருடைய கருத்தாக நான்பார்க்கிறேன். எந்த தவறும் இல்லை.

பாஜகவுக்குள் எதுசெய்தாலும் தனிப்பட்ட முறையில் செய்ய முடியாது, அனைத்தும் கலந்து பேசியே முடிவுசெய்யப்படும். நயினார் நாகேந்திரன் யாருக்கு எதிராகவும் எதுவும் பேசவில்லை. எங்களுக்கு எதிரி திராவிட முன்னேற்ற கழகம்தான். அரசியலில் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். ஆனால் இதெல்லாம் சரிசெய்து முன்னே எடுத்துச் செல்வோம். எங்களுடைய கூட்டணிக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை .எல்லோருக்குமே திமுகவை வீழ்த்தவேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கமாக உள்ளது” என்று அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...