மேற்குவங்கம் பாதுகாப்பில்லை

மேற்குவங்கத்தில் தலைவர்கள் மீதான வன்முறை தாக்குதல்களின் சம்பவங்களுக்கு எதிராக, அந்தமாநில முதல்வர் மமதா பானர்ஜியை பாஜக கடுமையாகக் குற்றம்சாட்டியது.

பாஜக தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய செய்தித்தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில்,

பாஜக தலைவர்கள் மீதான தாக்குதல் சம்பங்களை மூடிமறைக்கவும், தாக்குதல் சம்பவம் தொடர்புடையவர்களை மமதா பாதுகாக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

அலிபுர்துவாரில் வெள்ள நிவாரணப் பொருள்களை விநியோகிக்கும்போது பாஜக எம்எல்ஏ மனோஜ்குமார் மீது திரிணாமுல் காங்கிரஸ் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதேபோன்று மேற்கு வங்கத்தின் வடக்குப்பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தூர்ஸ் பகுதிக்கு வந்தபோது ​​ஒருகும்பல் நடத்திய தாக்குதலில் மால்டா மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் பாஜக எம்பி முர்முவும், எம்எல்ஏ சங்கர் கோஷும் காயமடைந்தனர்.

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின்கீழ் அரசியல் வன்முறை நிறுவன மயமாக்கப்பட்டு, இயல்பாக்கப்பட்டு, சட்டப் பூர்வமாக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் தலைமைதாங்குவது திரிணமூல் காங்கிரஸ் அல்ல, தலிபானின் மனநிலை மற்றும் கலாசார அரசாங்கமே என்று அவர் கூறினார், மேற்கு வங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பு இல்லை.

மாஃபியாக்கள், ஜிஹாதிகள் மட்டும் திரிணாமுல் ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளன. பாஜக தலைவர் களுக்கு எதிராக நடத்தப் பட்ட கொலைவெறித் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கேள்விஎழுப்பினார். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...