பீகார் மீண்டும் அரியணை ஏறும் என்.டி.ஏ

பீகார் மாநிலத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கருத்துகணிப்புகள் வெளியாகி உள்ளன.

பீகார் மாநில சட்டசபை தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மாநிலத்தில் அரசியல் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ள நிலையில், IANS–Matrize News Communications நடத்திய முதல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள பீகார் சட்ட சபையில், கருத்துக்கணிப்பு படி தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 49% வாக்கு வீதத்துடன் 150 முதல் 160 இடங்கள்வரை வெற்றிபெறும் வாய்ப்புள்ளது. இது 2020 தேர்தலில் NDA பெற்ற 37.3% வாக்கு வீதத்தைவிட மிகப்பெரிய உயர்வாகும். அதில் பாஜக (BJP) முக்கிய பங்காற்றி 21% வாக்குகளுடன் 80–85 இடங்கள் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஜனதாதளம் யுனைடெட் (JD-U) 18% வாக்குகளுடன் 60–65 இடங்கள் பெறும் வாய்ப்உள்ளது. சிறிய கூட்டணி கட்சிகளான ஹிந்துஸ்தானி அவாம் மொர்ச்சா (HAM) 2% (3–6 இடங்கள்), லோக்ஜன்ஷக்தி பார்ட்டி (ராம் விலாஸ்) 6% (4–6 இடங்கள்), மற்றும் ராஷ்ட்ரிய லோக் மொர்ச்சா (RLM) 2% (1–2 இடங்கள்) என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி மொத்தத்தில் நிலையான ஆட்சியை அமைக்குமளவு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் என ஆய்வு கூறுகிறது.

இந்தியா கூட்டணி 36% வாக்குகளுடன் 70–85 இடங்கள் மட்டுமேபெறும் என கணிக்கப் பட்டுள்ளது. அதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் 21% வாக்குகளுடன் 60–65 இடங்கள் பெறலாம் என கூறப்படுகிறது. இந்திய தேசியகாங்கிரஸ் (INC) 8% வாக்குகளுடன் 7–10 இடங்கள், CPI(ML)L 4% (6–9 இடங்கள்), CPI மற்றும் CPI(M) தலா 1% (0–1 இடங்கள்) பெறலாம் என கணிப்பு தெரிவிக்கிறது. விகாச்சீல் இன்சான் பார்ட்டி (VIP) 1% வாக்குகளுடன் 2–4 இடங்கள் பெறும்வாய்ப்பு உள்ளது.

AIMIM 1% வாக்குகளுடன் 1–3 இடங்களில் வெற்றி பெறலாம் என கூறப்பட்டுள்ளது. முன்னாள் தேர்தல்வியூகம் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி இந்தமுறை போட்டியிடுகிறது. கருத்துக்கணிப்பில் இதற்கு 7% வாக்குகள் மற்றும் 2–5 இடங்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள், BSP மற்றும் JMM, சேர்ந்து 7% வாக்குகளுடன் 7–10 இடங்கள் பெறும் என கூறப்படுகிறது.

கருத்துக்கணிப்பு பீகார் வாக்காளர்கள் மிகுந்த பிரிவினையாக உள்ளதாக கூறுகிறது. நிதீஷ்குமார் தலைமையிலான NDA இரட்டை இயந்திர ஆட்சியை முன்னிறுத்துகிறது. இதேசமயம் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவ் வேலைவாய்ப்பு, வறுமை, குடியிருப்பு பிரச்சினைகள் போன்றவையே தேர்தல் பிரச்சாரத்தின் மையமாகக் கொண்டுள்ளார். பீகாரில் யாதவ், குர்மி, மற்றும் மிகவும் பின்தங்கிய சமூகங்கள் (EBC) ஆகியோரின் ஆதரவு முக்கியபங்கு வகிக்கிறது. NDA கூட்டணியின் பரந்த சமூக அடிப்படை இதனை வலுப்படுத்துகிறது என ஆய்வு தெரிவிக்கிறது.

நிதீஷ் குமார் 2005 முதல் பலமுறை ஆட்சியில் இருந்தவர். 2024 ஜனவரியில் NDA-வில் மீண்டும் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது தலைமையில் BJP உடன் கூட்டணி வலுவடைந்துள்ளது. இதனால் மீண்டும் அவர் முதலமைச்சராகத் தேர்வாகும் வாய்ப்புஇருப்பதாக கருத்துகணிப்பு கூறுகிறது. 2020 தேர்தலில் NDA 125 இடங்களும், மகாகட்பந்தன் 110 இடங்களும் பெற்றது. இந்த முறை NDA தெளிவான பெரும்பான்மை பெறும் என இந்த முதல் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...