பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மக்கள்சந்திப்பு நிகழ்வை மதுரையில் துவங்கிவைக்க வருகை தரும் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, எய்ம்ஸ் கட்டுமானப்பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு விருந்தளித்து உபசரிக்க உள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘தமிழ்நாடு தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் தேர்தல்பரப்புரையை வரும் 12-ம் தேதி மதுரையில் துவக்குகிறார். இப்பரப்புரை பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் வரும் 12-ம் தேதி மதுரையில் தொடங்கி தமிழ்நாட்டின் பல்வேறுபகுதிகளுக்கு சென்று நவம்பர் 17ஆம் தேதி திருநெல்வேலியில் தனது முதல்கட்ட பரப்புரை பயணத்தை நிறைவுசெய்கிறார்.
மதுரையில் 12-ம் தேதி நடைபெறும் பிரச்சார பயணதுவக்க விழாவில் மத்திய சுகாதார அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான ஜே.பி நட்டா டெல்லியில் இருந்து வரும் 12-ம் தேதி காலை சிறப்புவிமானத்தில் மதுரை வருகிறார். மதுரை விமானநிலையத்தில் இருந்து தோப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆய்வுசெய்கிறார். மேலும் எய்ம்ஸ் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நன்றிதெரிவிக்கும் வகையில், அவர்கள் அனைவருக்கும் விருந்தளித்து உபசரிக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சாமி தரிசனம் செய்யஉள்ளார். பின்னர் மதுரை விமான நிலைய பிரதான சாலையில் உள்ள தனியார் தங்கும்விடுதியில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
சில மணிநேர ஓய்வுக்கு பிறகு மதுரை, அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்பிகா திரையரங்கம் அருகே நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணத்தை துவங்கிவைத்து, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சிறப்புரை ஆற்ற உள்ளார்.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |