பிரதமரின் தானிய வேளாண் திட்​டம்

பிரதமரின் தானிய வேளாண் திட்​டம் மற்​றும் தற்​சார்புபருப்பு உற்​பத்தி திட்​டம் என்ற இருபெரிய வேளாண் திட்​டங்​களை ரூ. 34,440 மதிப்​பில் பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்​தார். ரூ.5,450 கோடி மதிப்​பில் கால்​நடைவளர்ப்​பு, மீன்வளம் மற்​றும் உணவு பதப் ​படுத்​துதல் திட்​டங்​களை​யும் அவர் தொடங்கி வைத்​தார்.

லோக்​ நாயக் ஜெய்​பிர​காஷ் நாராயணின் பிறந்​த நாள் கொண்​டாட்​டத்தை முன்னிட்​டு, டெல்​லி​யில் உள்ள இந்​திய வேளாண் ஆராய்ச்சிமையத்​தில் சிறப்புவேளாண் திட்​டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்​தார். இதுகுறித்து பிரதமர் அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வேளாண் உற்​பத்​தியை அதி​கரிக்​க​வும், பயிர் வகை​களின் உற்​பத்​தியை விரி​வாக்க​வும், நீடித்த மற்​றும் நிலை​யான வேளாண் முறை​களை பின்​பற்​ற​வும், பஞ்​சா​யத்து மற்​றும் வட்​டாரஅளவில் அறு​வடை செய்​யப்​படும் பயிர்​களை சேமிக்​க​வும், நீர்ப்​பாசன திட்​டங்​களை விரிவுபடுத்​த​வும், தேர்வுசெய்​யப்​பட்ட 100 மாவட்​டங்​களில் நீண்டகால மற்​றும் குறுகிய கால பயிர்​கடன் வசதி​கள் கிடைக்​க​வும் பிரதமரின் தானிய வேளாண் திட்​டம் ரூ.24,000 கோடி மதிப்​பில் தொடங்கி வைக்​கப்​பட்​டுள்​ளது.

பருப்பு உற்​பத்​தியை மேம்​படுத்​த​வும், பருப்புஉற்​பத்தி செய்​யப்​படும் நிலங்​களின் அளவை விரிவுபடுத்​த​வும், பருப்புகொள்​முதல், சேமிப்பு மற்​றும் பதப்​படுத்​துதல் ஆகிய​வற்றை மேம்​படுத்​தும் நோக்​கில் ரூ.11,440 கோடி மதிப்​பில் தற்​சார்பு பருப்புஉற்​பத்தி திட்​டத்​தை​யும் பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார்.

இந்த சிறப்பு வேளாண்திட்​டத்​தில் விவ​சா​யிகளு​ட​னும் பிரதமர் மோடி கலந்​துரை​யாடி​னார். வேளாண்​மை, கால்​நடைவளர்ப்​பு, மீன்​வளம் மற்​றும் உணவு பதப்​படுத்​துதல் துறை​களில் ரூ.5,450 கோடிக்கு மேலான திட்​டங்​களை​யும் பிரதமர் மோடி தொடங்கிவைத்​தார். ரூ.815 கோடி மதிப்​பிலான கூடு​தல் வேளாண் திட்​டங்​களுக்​கும் அவர் அடிக்​கல் நாட்​டி​னார்

பெங்​களூருவில் செயற்கைகரு​வூட்​டல் பயிற்சி மையம், குஜ​ராத்​தின் அம்​ரேலி மற்​றும் பனாஸ் பகு​தி​யில் சீர்மிகு மையம், ராஷ்ட்​ரிய கோகுல் திட்​டத்​தின் கீழ் அசாமில் செயற்கை கரு​வூட்​டல் பரிசோதனைக் கூடம், மெஹ்ச​னா, இந்​தூர் மற்​றும் பில்​வாரா பகு​தி​யில் பால் பவுடர் தயாரிப்பு மையங்​கள், அசாம்தேஸ்​பூரில் மீன் உற்​பத்தி நிலை​யம், வேளாண் பொருட்​கள் பதப்​படுத்​துதல் மையங்​கள், குளிர்​சாதன கிடங்​கு​கள், மற்​றும் மதிப்​பு​கூட்டு கட்​டமைப்​பு​களை​யும் பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார்.

ஆந்​தி​ரா​வின் கிருஷ்ணா​வில் ஒருங்​கிணைந்த குளிர்​சாதனகிடங்​கு, மதிப்புகூட்டு கட்டமைப்​பு, உத்​த​ராகண்​டில் நன்னீர் மீன்வளர்ப்​பு, நாகாலாந்​தில் ஒருங்​கிணைந்த மீன் வளர்ப்பு பூங்​கா, புதுச்​சேரி காரைக்​காலில் ஸ்மார்ட் மற்​றும் ஒருங்​கிணைந்த மீன்​பிடி துறை​முகம், ஒடி​சா​வின் ஹிராகுட் நகரில் ஒருங்​கிணைந்த மீன்பண்ணை ஆகிய​வற்​றுக்​கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்​கல் நாட்​டி​னார்.

இயற்கை வேளாண்​மைக்​கான தேசியதிட்​டத்​தின் கீழ் 50,000 விவ​சா​யிகளுக்கு சான்​றிதழ்​கள் வழங்​க​பட்​டுள்​ளன. கிராமங்​களில் 38,000 பேருக்​கு, வேளாண் தொடர்​பான செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்பபயிற்​சி அளிக்​கப்​பட்​டு உள்​ளது. இவ்​வாறு பிரதமர்​ அலு​வல​கம்​ தெரிவித்​துள்​ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...