தாங்கள் மறுபடியும் ஆட்சிஅமைப்போம் என்ற இறுமாப்பில் இருக்கிற திமுக கூட்டணியை வீழ்த்தி, தேஜ கூட்டணி ஆட்சியமைக்க, பாஜக தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டுமென அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
மதுரையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணிகுறித்தும், திமுகவை வீழ்த்த ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும் என்றும் கட்சித் தொண்டர்களை அறிவுறுத்தினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியபோது, “அண்ணன் நயினார் நாகேந்திரன் 67 கட்சி மாவட்டங்களுக்கு யாத்திரையாக செல்லவிருக்கிறார். ஏற்கனவே யாத்திரை தொடங்கிய அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் இப்போது 167 தொகுதிகளை கடந்து இன்று ஈரோட்டில் பிரச்சாரம் செய்துவருகிறார். அவருக்கு இன்னும் 63 தொகுதிகள் தான் பாக்கியிருக்கின்றன.
எங்கள் கூட்டணியானது மக்களின்மனதை பிரதிபலிக்கிற ஒருகூட்டணியாக மாறிக் கொண்டிருக்கிறது. மத்தியஅரசின் பயனாளிகள் எல்லாரையும் கூட்டிவந்து நயினார் நாகேந்திரனின் யாத்திரையை வெற்றிகரமாக மாற்றுவது ஒவ்வொரு பாஜக தொண்டனின் கடமையாகும். எனவே மழை, புயல், பனி என பாராமல் அடுத்த 4 மாதம் களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்.
தாங்கள் மறுபடியும் ஆட்சி அமைப்போம் என்று திமுகவினர் இறுமாப்புடன் இருக்கிறார்கள். எதையும் பணத்தைகொடுத்து வாங்கிவிடலாம், பெண்களுக்கு கொடுக்கிற 100 ரூபாய் வாக்காகமாறும், பாஜக மீது அதிருப்தியில் இருப்பவர்களால் சிதறும் வாக்குகளை பெறலாம் போன்றவைதான் அதிமுகவின் இறுமாப்புக்கு காரணம்.
தொழில் துறையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இருக்கக் கூடிய தமிழகத்தில் 88 கள்ளச்சாராய சாவு நடந்திருப்பது தமிழகத்திற்கே அவமானம். 2 வாரங்களுக்குமுன்பு கரூரில் 41 அப்பாவி பொதுமக்கள் இறந்திருக்கிறார்கள். காவல் துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வந்தார்கள். ஆனால் அங்கு 100 போலீஸ்கூட பணியில் இல்லை. அதேசமயம் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கொலைசெய்த குற்றவாளியின் ஈமச்சடங்கில் 1100 போலீசார் பணியில் இருந்துள்ளனர்.
நகரத்திலிருந்து கிராமம்வரை ஆவணப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்பு கரூருக்குச்சென்று யாரை மோசமானவர் என்று குறிப்பிட்டாரோ அவரை இன்று உலகமகா கதாநாயகன் என்று சொல்கிறார் மு.க.ஸ்டாலின். கலைஞர் கருணாநிதி ஐயா பெயரில் சாலைஅமைப்பது, சிலை அமைப்பது, விழா எடுப்பதுதான் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியின் வேலையாக இருக்கிறது.
எனவே இந்தஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் வகையில் வாக்குகள் சிதறாமல் நமது கூட்டணிக்கு கொண்டுவர அயராது முயற்சிக்க வேண்டும்” என்று அண்ணாமலை தனது தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |