கள்ளக் குறிச்சிக்கு போகாத கால்கள்; கரூருக்கு மட்டும் போனது

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்திற்கு காரணம், தவெக கேட்ட இடத்தில் அனுமதி தராதது தான் என நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சண்முகம் சாலையில் பாஜக சார்பில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை நிகழ்வில் பாஜக மாநிலதலைவர் நயினார் நாகேந்திரன் மக்களிடையே பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியவர், “திராவிடமாடல் அரசை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்ற நோக்கத்திற்காக பல்லாயிரக்கணக்கானோர் இந்த கூட்டத்தில் கூடியிருக்கிறார்கள். இந்தகூட்டணி ஆட்சி மாற்றத்திற்கு அச்சாரமாக விளங்கும் கூட்டணி. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது.

பாதாள சாக்கடை பணிகளை ஒழுங்காக செய்யாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கும் பிரச்சனை இருக்கிறது. பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளது. கள்ளக் குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் இறந்து போனார்கள். கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து போனார்கள். கள்ளக்குறிச்சிக்கு போகாத கால்கள்; கரூருக்குமட்டும் போனது ஏன் என்ற கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது.

கரூரில் நடந்த சம்பவத்திற்கு இரவோடு இரவாக முதலமைச்சர் வந்தார். இரவோடு இரவாக 41 உடல்களையும் பிரேதபரிசோதனை செய்ய காரணம் என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

எந்த ஒருவளர்ச்சி பணிகளும் பெறாத, இந்த செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு எத்தனை ஆத்திரம் இருக்கும். இந்தஆட்சியில் லஞ்சம் ஊழல் சாதாரண மக்கள் எதையும் வாங்க முடியவில்லை, விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டு இருக்கிறது.

தமிழகம் வளர்ச்சி அடைந்தது எனச் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். எங்கே வளர்ச்சி அடைந்திருக்கிறது தெரியுமா? பாலியல் குற்றங்களில் வளர்ச்சி அடைந்திருக்கிறது; பெண்களுக்கு எதிரானகுற்றங்கள் 52% அதிகரித்து இருக்கிறது; குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 19% அதிகரித்து இருக்கிறது; போக்சோ குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் வயதானவர்கள் கொலை அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. போதைப்பொருள் அதிகமாகிப் போனதால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போய் பலபடுகொலைகள் நடைபெறுகிறது.

மொத்தம் 41 பேர் கரூரில் உயிரிழந்தார்களே; யார் காரணம்? அதற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்கவேண்டும். தமிழக முதலமைச்சர் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். எதிர்க்கட்சிகள் எங்குகூட்டம் நடத்தினாலும், அதற்கு அனுமதி கொடுக்காமல் இருக்கிறார்கள். கரூரில் நடந்த விபத்திற்கு காரணம் அவர்கள் கேட்டஇடத்தில் அனுமதி தராததுதான். கொடுத்திருந்தால் நிச்சயம் இந்த சம்பவம் நடந்திருக்காது. அங்கே லத்தி சார்ஜ் நடந்து இருக்கிறது. செருப்பை கழட்டி வீசி இருக்கிறார்கள். இது எல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம்ம முதலமைச்சர் என்ன செய்வார் என்றால், யார்விபத்தில் இறந்து போனாலும் அவர்களுக்கு இரண்டு, மூன்று லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிதியிலிருந்து கொடுப்பார்கள். ஆனால், கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்ச ரூபாய் கொடுப்பார்கள். இதுதான் திராவிடமாடல் ஆட்சி.

திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர , அனைவரும் ஒன்றுபட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க பாடுபடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.