ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து வாங்குவோம்

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காது” என்று பிரதமர் மோடி தனக்கு உறுதியளித்ததாக டிரம்ப் கூறி வழக்கம்போல் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அதற்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ள நிலையில், வழக்கம்போல ராகுல் காந்தி சில கேள்விகளை எழுப்பி பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்றது முதலே அதிரடி கருத்துக்களை கூறி உலகளவில் பேசுபொருளாக இருந்து வருகிறார் டொனால்ட் ட்ரம்ப். அதில் பலவும் பொய்களாக இருப்பதால் அம்பலபட்டும் வருகிறார். இதில் இந்தியாவையும் வம்புக்கு இழுக்க ட்ரம்ப் தவறவில்லை. இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – ரஷ்யா, இந்தியா – சீனா விவகாரங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார். குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல் தன்னுடைய தலையீட்டால் நின்றதாக தொடர்ந்து கூறிவருகிறார். இந்தியா இதனை வெளிப்படையாக மறுத்தபோதும் ட்ரம்ப் தொடர்ந்து சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார்.

அந்தவகையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி புதுசர்ச்சையை உருவாக்கி இருக்கிறார். இந்த நடவடிக்கையை ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப் படுத்தும் முயற்சிகளில் ஒரு பெரியபடி என்று டிரம்ப் விவரித்தார்.

இது குறித்து ட்ரம்ப் பேசியபோது, இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடைய வில்லை. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கமாட்டார்கள் என்று நரேந்திர மோடி இன்று எனக்கு உறுதியளித்தார், என்று டிரம்ப் வெள்ளை மாளிகை நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் பேசிய ட்ரம்ப், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கவில்லை என்றால் அது ஒரு பெரியபடி. இப்போது நாம் சீனாவையும் அதே காரியத்தைச்செய்ய வைக்கப் போகிறோம். இந்தியாவால் ஏற்றுமதிகளை உடனடியாக நிறுத்த முடியாது என்றும், இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் அந்த செயல்முறை விரைவில் முடிந்துவிடும் என்றும் டிரம்ப் கூறினார்.

பிரதமர் மோடி, டிரம்பிற்கு அத்தகைய உறுதிமொழியை அளித்தாரா என்பது குறித்து நேரடியாக இந்தியா தரப்பில் தற்போதுவரை எந்தவிளக்கமும் கொடுக்கவில்லை. உக்ரைனில் நடந்துவரும் போருக்கு மத்தியில், ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை நசுக்கும் முயற்சிகளை அமெரிக்கா தீவிரப்படுத்திவரும் நிலையில், ட்ரம்ப் இந்தியா குறித்து தற்போது இப்படி ஒருகூற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. நிலையான எரிபொருள்விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதுகாப்புத்தன்மை ஆகிய இரண்டும்தான் இந்தியாவின் எரிசக்தி கொள்கை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , அமெரிக்காவுடன், பலஆண்டுகளாக இந்தியா எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயற்சித்து வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் இது சீராக முன்னேறிவருகிறது. தற்போதைய நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது.

இருநாடுகளுக்கு இடையே இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும்நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்துவருகிறது. எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப் படுகின்றன.கச்சா எண்ணெய் விலை குறைவாக கிடைத்தால் இந்திய மக்களின் நன்மைக்காக ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து வாங்குவோம் என்பதைதான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறைமுகமாக கூறியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக இந்திய பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...