21-ம் நூற்​றாண்டு 140 கோடி இந்​தி​யர்​களின் நூற்​றாண்டு

21-ம் நூற்​றாண்டு என்​பது 140 கோடி இந்​தி​யர்​களின் நூற்​றாண்டுஆகும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திரமோடி ஒரு நாள் சுற்​று​பயண​மாக நேற்றுகாலை டெல்​லி​யில் இருந்து விமானம்மூலம் கர்​னூல் வந்​தார். பின்னர், கர்​னூல் நன்​னூருக்கு ஒரே ஹெலி​காப்​டரில் பிரதமர் மோடி, முதல்வர் சந்​திர​பாபுநாயுடு, துணை முதல்வர் பவன் கல்​யாண் ஆகியோர் சென்​றனர். அங்கு ‘சூப்​பர் ஜிஎஸ்டி – சூப்​பர் சேவிங்​ஸ்’ என்ற பெயரில் பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​ய​பட்​டிருந்​தது.

இதில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். அப்​போது காணொலி மூலம் ரூ.13,429 கோடி மதிப்​பில் பல்​வேறு நலத்திட்​ட பணி​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். சிலதிட்​டங்​களை அவர் தொடங்​கிவைத்​தார். குறிப்​பாக ரூ.9,449 கோடி மதிப்பில் 5 திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல்நாட்​டி​னார். ரூ.1,704 கோடி செல​வில் கட்​டப்​பட்ட 8 திட்​டங்​களை அவர்தொடங்கி வைத்​தார். மேலும்​, ரூ.2,276 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்ட 2 திட்​டங்​களை நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார். இதன் ​பிறகு பிரதமர் நரேந்​திரமோடி தனது உரையை தெலுங்​கில் தொடங்​கி​னார். அதன் பின்​னர் இந்​தி​யில் உரை​யாற்​றி​னார். அவரதுபேச்சை மத்​திய விமானதுறை அமைச்​சர் ராம்​மோகன் நாயுடு மொழி பெயர்த்​தார். பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

கர்​னூலில் குடி​கொண்​டுள்ள அஹோபிலம் நரசிம்​மர், மகா நந்​தீஸ்​வரர், மந்​திரால​யம் குரு ராகவேந்​திரர் ஆகியோரின் ஆசிகள் அனை​வருக்​கும் இருக்க வேண்​டும் என பிரார்த்​திக்​கிறேன். சைலம் ஜோதிர்​லிங்​கம் மல்​லி​கார்​ஜுனரை தரிசித்​ததை எனது ஜென்ம பாக்​கிய​மாக கருதுகிறேன். சத்​ரபதி சிவாஜி​யின் நினைவு மையத்தை​யும் பார்​வை​யிட்டு அவருக்கு என்​னுடைய அஞ்​சலியை சமர்ப்​பித்​தேன்.

நாட்​டின் கலாச்​சா​ரத்​துக்கு ஆந்​திரா மிகச்சிறந்த எடுத்​துக்​காட்டு ஆகும். ஆந்​தி​ரா​வுக்கு பலமான, திறமை​யான தலை​மையை முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, துணை முதல்​வர் பவன்கல்​யாண் வழங்கி வரு​கின்​றனர். இவர்​களுக்கு மத்​திய அரசின் முழு ஒத்துழைப்பு உள்​ளது. கடந்த 16 மாதங்​களாக ஆந்​தி​ரா​வில் கூட்டணி அரசு மிகச் சிறப்​பாக ஆட்சி நடத்திவரு​கிறது.

எனக்கு முன்​பாக முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​னார். அவரது தொலைநோக்கு பார்​வை​யின்​படி, 21-ம் நூற்​றாண்டு 140 கோடி இந்​தி​யர்​களின் நூற்​றாண்​டாக அமை​யும்.

இன்​றைய தினம் சாலை, மின்​சா​ரம், ரயில்​வே, விமான போக்​கு​வரத்​து, பாது​காப்பு உள்​ளிட்ட துறைகள்சார்ந்த திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டினோம். இது வருங்​கால இந்​தி​யா​வுக்கு மிக​வும் முக்​கிய​மானதும் ஆகும்.

2 நாட்​களுக்கு முன்​னர் கூகுள்நிறு​வனம் ஆந்​தி​ரா​வில் முதலீடுசெய்ய ஒப்​பந்​தம் செய்​தது. அப்​போது, அமெரிக்​காவை ​விட ஆந்​தி​ரா​வில் அதி​கம் முதலீடு செய்​வோம் என கூகுள் சிஇஓ என்​னிடம் கூறி​னார். ஏஐ டேட்டா மைய முதலீடு மூலம் விசாகப்​பட்​டினம் விரை​வில் பெருவளர்ச்சி அடை​யும். பல நாடு​களில் இருந்து கடல் மூலம் விசாகப்​பட்​டினம் வரை கேபிள் அமைக்​கப்​படும். இதில் பல நாடு​கள் இணை​யும். கூகுள் ஏஐ டேட்டா மையத்​தால் ஆந்தி​ரா​வுக்கு மட்​டுமல்ல, ஒட்​டுமொத்த நாடும் வளர்ச்சி அடை​யும். இதன் மூலம் சந்​திர​பாபு நாயுடு​வின் ஸ்வர்​ணாந்​திரா 2047 என்ற கனவு நனவாகும்.

நம் நாட்​டின் வளர்ச்​சிக்​கு, ஆந்​தி​ரா​வின் வளர்ச்​சி​யும் முக்​கி​யம். இதில் ராயல சீ​மா​வின் வளர்ச்சி​யும் அடங்​கும். 21-ம் நூற்​றாண்​டில் நம் நாட்​டின் வளர்ச்​சியை உலகமே உற்றுநோக்கி வரு​கிறது. இதில் ஆந்​தி​ரா​வின் வளர்ச்​சி​யும் நமக்குபெருமை சேர்க்​கும் வகை​யில் உள்​ளது. இவ்​வாறு பிரதமர்​ நரேந்திர மோடி பேசினார்.

கர்னூல்வந்த பிரதமர் மோடியை ஆளுநர் அப்துல் நசீர் அகமது, முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், ஐடி, கல்வித் துறை அமைச்சரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் உட்பட பலர் வரவேற்றனர். அப்போது, அமைச்சர் லோகேஷை பார்த்து பிரதமர் மோடி, “கடந்த முறை பார்த்ததைவிட தற்போது நன்றாக எடை குறைந்துவிட்டாய். விரைவில் உன் தந்தையை போல உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வாய் என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார். அதோடு அமைச்சர் நாரா லோகேஷை அவர் தட்டிக் கொடுத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...