மீனவர் நலன் குறித்து இலங்கை பிரதமரிடம் பேசினேன்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பின் போது நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தசந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, “இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு, நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள்குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியா – இலங்கை இடையேயான ஒத்துழைப்பு, இருநாட்டு மக்களின் செழிப்புக்கும், பிராந்தியத்தின் நலனுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். அவருக்கு அன்பான வரவேற்பை அளித்த பிரதமர், வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா – இலங்கை உறவுகளுக்கு அவருடைய வருகை புதியஉத்வேகத்தை அளிக்கும் என கூறினார்.

இந்த ஆண்டு ஏப்ரல்மாதம் தான் இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அப்போது அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் கலந்துரை யாடியதை சுட்டிக்காட்டினார். கல்வி, தொழில்நுட்பம், புதுமை, மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு, நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்புஉறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இருநாடுகளின் வளர்ச்சிப் பயணத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், அதிபர் அனுரகுமார திசநாயக்கவுக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...