நமதுபாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது

பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று (அக்டோபர் 20, 2025), இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான விமானம்தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தில் இந்தியக் கடற்படையினருடன் கோவா கடற்கரையில் தீபாவளியைகொண்டாடினார். முப்படைகளுடன் திருவிழாவைக் கொண்டாடும் அவரது பத்தாண்டுகால பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு கடற்படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

ஐ.என்.எஸ் விக்ராந்தின் கடல்தளத்தில் கடற்படையினர் மத்தியில் உரையாற்றிய மோடி, முப்படைகளுக்கும் இடையிலான அசாதாரண ஒருங்கிணைப்பு காரணமாகவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ சமயத்தில் பாகிஸ்தான் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறினார். மேலும், “மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழித்து” நாடு ஒருபெரிய மைல்கல்லை எட்டியிருப்பதற்கு இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் வீரம் மற்றும் மன உறுதியேகாரணம் என்று அவர் பாராட்டினார்.

“சில மாதங்களுக்கு முன்பு, ஐ.என்.எஸ் விக்ராந்த் அதன் பெயரைக் கேட்டே பாகிஸ்தான் முழுவதும் உறக்கமில்லாத இரவுகளைக் கடந்தது என்பதை நாம் கண்டோம். எந்த ஒருபெயரால் எதிரியின் தைரியம் நொறுங்கிப் போகிறதோ, அதுதான் ஐஎன்எஸ் விக்ராந்த். இந்தியக் கடற்படை ஏற்படுத்தியபயம், இந்திய விமானபடையின் நம்பமுடியாத திறமை, இந்திய ராணுவத்தின் வீரம்… இந்த மூன்று பிரிவுகளின் மகத்தான ஒருங்கிணைப்பு தான் ‘ஆபரேஷன் சிந்தூரில்’ பாகிஸ்தானை இவ்வளவு விரைவாகச் சரணடையத் தூண்டியது” என்று மோடி இந்தியில் பேசினார்.

“தற்காப்புப் படைகள் வலிமை பெற தற்சார்பு (atmanirbharta) அத்தியாவசியமானது. கடந்த பத்தாண்டுகளில் நமது ஆயுதப்படைகள் தற்சார்பை நோக்கி வேகமாக முன்னேறிவருவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். நமது படைகள் ஆயிரம் பொருட்களை பட்டியலிட்டு, அந்தப்பொருட்கள் இனி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படாது என்று முடிவு செய்தன. இதன் விளைவாக… ராணுவத்திற்கு அத்தியாவசியமான பெரும்பாலான உபகரணங்கள் இப்போது நாட்டிலேயே தயாரிக்கபடுகின்றன. கடந்த 11 ஆண்டுகளில், நமது பாதுகாப்பு உற்பத்தி மும்மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல், கடற்படைக்கு 40 க்கும் மேற்பட்ட உள்நாட்டுத் தயாரிப்புக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்கள் இந்தியக் கப்பல் கட்டும் தளங்களில் இருந்து கிடைத்துள்ளன” என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவை ஒரு சிறந்த பாதுகாப்பு ஏற்றுமதி நாடாக மாற்றுவதே இலக்கு என்று பிரதமர் மோடி கூறினார். “பிரமோஸ் மற்றும் ஆகாஷ் போன்ற நமது ஏவுகணைகள் ஆபரேஷன் சிந்தூரில் அவற்றின் திறனை நிரூபித்துள்ளன. பிரமோஸின் பெயரைக் கேட்டாலே, பிரமோஸ் வருகிறதா என்று சிலர் கவலைப் படுகிறார்கள். பலநாடுகள் இப்போது இந்த ஏவுகணைகளை வாங்க விரும்புகின்றன. ஆயுதப் படைகளுக்கான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றுமதிசெய்யும் திறனை பாரத் வளர்த்து வருகிறது. உலகின் முன்னணி பாதுகாப்பு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு. கடந்த பத்தாண்டுகளில், நமதுபாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது” என்று அவர் கூறினார்.

ஐ.என்.எஸ் விக்ராந்தில் இருந்தபோது பிரதமருக்குப் பல நிகழ்ச்சிகள் நிறைந்த அட்டவணை இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் மிக்-29கே (MiG-29K) போர் விமானங்களால் சூழப்பட்டிருந்த விமான தளத்தைப் பார்வையிட்டார். அத்துடன், குறுகிய ஓடுபாதையில் போர்விமானங்கள் பகல் மற்றும் இரவில் தரையிறங்குவது மற்றும் டேக்-ஆஃப் செய்வதைக் கொண்ட வான் சக்தி செயல்விளக்கத்தை கண்டார்.

மேலும், அவர் ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இயற்றப்பட்ட பாடல் உட்பட, தேசபக்தி பாடல்களை நிகழ்த்தினர். பின்னர் மாலையில், பாரம்பரிய ‘பாரா கானா’வின் (Bara Khana – பெரிய விருந்து) போது கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இரவு உணவில் கலந்துகொண்டார்.

“நீங்கள் அனைவரும் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் இருப்பதைக் கண்டேன். நேற்று நீங்கள் பாடியபாடல்களையும், ஆபரேஷன் சிந்தூரை விவரித்த விதத்தையும் பார்த்தபோது… ஒரு போர்க் களத்தில் நிற்கும் ஒருசிப்பாய் அனுபவிக்கும் உணர்வை எந்தக் கவிஞராலும் வெளிப்படுத்த முடியாது” என்று மோடி அந்த நிகழ்ச்சியைப் பற்றி தனது உரையில் குறிப்பிட்டார்.

திங்கள்கிழமை காலையில், மோடி ஐ.என்.எஸ் விக்ராந்தின் தளத்தில் நடந்த யோகா அமர்வில் பங்கேற்றார். அதை தொடர்ந்து, ஒரு சடங்கு பூர்வமான நீராவிப் பாதையையும் (steam-past) மற்றும் விமான அணிவகுப் பையும் (fly-past) பார்வையிட்டார். மேலும், கடற்படையினருடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு இனிப்புகளையும் விநியோகித்தார்.

2014-ம் ஆண்டில் பதவி யேற்றதில் இருந்து, நாட்டின் எல்லையில் சேவை செய்ப வர்களுடன் ஒற்றுமையின் அடையாளமாக – சியாச்சின், சும்டோ முதல் ராஜௌரி, கார்கில் மற்றும் சர் கிரீக் வரை – முப்படையினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதை மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...