நெல் கொள்முதல் செய்வதில் பெரும் குளறுபடி

டெல்டா விவசாயிகளிடம் நெல் கொள்முதல்செய்வதில் பெரும் குளறுபடி நிலவுவதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “டெல்டா பகுதியில் முறையாக நெல்கொள்முதல் நடைபெறவில்லை. டெல்டா பகுதியில் விவசாயம்தான் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம். முறையாக நெல் கொள்முதல் செய்யப் படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாயிலாகவும், ஒரத்தநாட்டில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார். ஆனால் திமுக அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. நெல் கொள்முதல் தொடர்பாக சட்டப் பேரவை கூட்டத்தொடரின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த போது, முதலமைச்சர் சபையில் இருந்தும்கூட ஒருவார்த்தை பேசவில்லை” என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர், “தினசரி 800 மூட்டைகளே கொள்முதல் செய்யப்படும் நிலையில் சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியோ 2000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக பொய் கூறுகிறார்.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நெல் சாலையில் கொட்டிக் கிடப்பதை பார்க்கலாம். கடன்வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே சாகுபடிசெய்த விவசாயிகள் தற்போது பெரும் வேதனையில் உள்ளனர். நெல் கொள்முதலில் அதிமுக ஆட்சி காலத்தில் எந்த குளறும்படியும் நடக்கவில்லை.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 24 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யும் அளவிற்கு கிடங்குகள் இருந்தன. சிலஇடங்களுக்கு மட்டுமே உணவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆய்வுக்கு செல்கின்றனர். அப்போது விவசாயிகள், அமைச்சர்களிடம் பேசுவதை சிலர் தடுக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், “மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசிகலப்பிற்கு உத்தரவு தரவில்லை என சட்டசபையில் செப்டம்பர் 17 ல் ஆளும்கட்சி கூறியது. ஆனால் ஆகஸ்டு 18 ஆம் தேதியே செறிவூட்டபட்ட அரிசியை கலப்பதற்கான ஆணை மத்திய அரசிடம் இருந்து வந்துவிட்டது.

கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றிலும் 5-ல் இருந்து 10 ஆயிரம் மூட்டைகள் தேங்கிகிடக்கின்றன. கொள்முதல் தாமதத்தால் ஒரு லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கவில்லை.

அதிமுக ஆட்சியில்அறுவடைக்கு முன்பே விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகளின் கூட்டம் நடத்தப்படும். அந்தகூட்டங்களின் அடிப்படையில் சாக்கு, சணல் போன்றவை 6 மாதங்களுக்கு முன்பே கொள்முதல் செய்யப்படும். தேக்கிவைக்க இடம் இல்லாமல் கடந்த 4 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தபட்டுள்ளது.

நெல் கொள்முதலுக்காக சர்க்கரை ஆலைகுடோன்களை பயன்படுத்த போவதாக கூறுவது போகாத ஊருக்கு வழிசொல்லும் செயல். நெல் கொள்முதல் செய்வதில் போதுமான முன்எச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே இந்த குளறுபடிகளுக்கு காரணம்” என்றும் விமர்சித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...