தீவிரவாதிகளால் இருள் சூழ்ந்த பகுதிகளில் தீபம் ஒளிர்கிறது

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் இருள்சூழ்ந்த பகுதிகளில் தற்போது மகிழ்ச்சி எனும் தீபம் ஒளிர்வதாக பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் ‘மனதின்குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் அவர், சாதனை மனிதர்களைப் பாராட்டி வருகிறார். அந்த வகையில், 127ஆவது பதிப்பில் பேசிய அவர், நாட்டுமக்களுக்கு சத் பண்டிகை வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

சத் திருவிழா சமூகத்தின் ஒவ்வொரு சமூகத்தையும் ஒருங்கிணைபதாகவும், இந்தியாவின் சமூக ஒற்றுமைக்கு சத்திருவிழா சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார். தொடர்ந்து பேசியவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஆயுதப் படையினர் வெற்றியைப் பாராட்டினார்.

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை குறிப்பிட்டு பேசிய பிரதமர், தீவிரவாதிகளால் இருள் சூழ்ந்த பகுதிகளில் தற்போது மகிழ்ச்சி எனும் தீபம் ஒளிர்வதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

மக்கள் எங்கு வாழ்ந்தாலும் மரங்களை நடவேண்டுமென அறிவுறுத்திய பிரதமர் மோடி, அது உயிரினங்களின் முன்னேற்றத்திற்கு பயனளிக்கும் என வேதங்கள் கூறுவதாகக் குறிப்பிட்டார்.

சர்தார் பட்டேலின் 150ஆவது பிறந்தநாளை நினைவுகூர்ந்த பிரதமர், நவீன இந்தியாவின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவர் என பாராட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...