நமது சுயசார்பு பாரதக்கனவும் எட்டும் தொலைவில்தான் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வேலை வாய்ப்பைப் பெருக்கும் விதமாக நமது பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் கொண்டுவரப்பட்ட மின்னணு பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் ரூ.5,532 கோடி முதலீட்டில் 7 திட்டங்களுக்கு ஒப்புதல்அளித்துள்ளது வரவேற்பிற்குரியது.
அதிலும் 5 திட்டங்கள் மூலம், 77% முதலீட்டை தமிழகத்திற்கு மத்தியஅரசு வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சிய ளிப்பதோடு, தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீது நமது மத்தியஅரசு கொண்டுள்ள அபரிமிதமான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. சுமார் ரூ.4,200 கோடி முதலீட்டின் மூலம் பல்லாயிரக் கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு தமிழகத்தின் மின்னணுபொருட்கள் உற்பத்தியில் வீறுநடையிட வழிவகுத்துள்ள நமது பிரதமர் மோடி அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாகத் திகழும் நமது மத்தியமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தின் வளர்ச்சியில் முனைப்புடன் செயலாற்றும் இத்தகைய திறன் மிக்க மத்திய அரசினால் மின்னணு உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கும்நாளும், நமது சுயசார்பு பாரதக் கனவும் எட்டும் தொலைவில்தான் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. என தெரிவித்துள்ளார் .
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |