முயற்சி நம் கையில் இருந்தாலும், முடிவு இறைவன் கையில்

சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத்தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழ்நாடு வந்தார். இன்று காலை கோவைவந்த அவருக்கு தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், ” நான் குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்றதும் முதலில் சென்னை வருவதுதான் திட்டம். மாநிலத்தின் தலைநகருக்கு வருவது தான் மரபு. அதே தேதியில் செசல்ஸ் நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு செல்லுமாறு பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார்.

அதனால் திட்டம்மாறி கோவைமண் என்னை இழுத்து வந்ததாகக் கருதுகிறேன். இந்த மண்ணிலிருந்துதான் என் பொது வாழ்க்கை தொடங்கியது. இங்கு பலரும் பலதரப்பட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். உங்களில் ஒருவனாக எல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருப்பேன்.

நான் எம்பியாக இருந்த போது, என்டிசி தொழிலாளர்களின் போனஸ் பிரச்னை இருந்தது. நாங்கள் முயற்சி செய்து அந்தப் பிரச்னைக்கு தீர்வை எட்டினோம். யாரையும் அதிகம்பாராட்டாத சிஐடியூ தொழிற்சங்க தலைவர் நஞ்சப்பன் என்னை பாராட்டி வாழ்த்தினார். நான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தபோது, மோடி என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.

ஒரு சிலநாட்களில் என்னை ஜார்க்கன்ட் ஆளுநராக நியமித்தனர். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் அதை ஒரு மனதோடு ஏற்பவர்களுக்குத்தான் வெற்றி அதிகம் கிடைக்கும். முயற்சி நம் கையில் இருந்தாலும், முடிவு இறைவன் கையில்உள்ளது. தர்மமும், உண்மையும் நம்மிடம் இருந்தால் எல்லாமே சாத்தியம்.” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...