நியூஸ் 18 இன் ‘சப்சே படா தங்கல்’ (‘Sabse Bada Dangal’) நிகழ்ச்சியில் நெட்வொர்க் 18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல்ஜோஷிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரத்யேக பேட்டியளித்தார். பிரதமர் நரேந்திர மோடி குறித்த கருத்துகளுக்கு ராகுல்காந்தி அதற்கான விலை கொடுக்க நேரிடும் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி வாக்குகளுக்காக மேடையில் நடனமாடுவார் என்ற ராகுல் காந்தியின் கருத்துக்குபதிலளித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, “தேர்தலில் ராகுல்காந்தி இதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். பிரதமர் மோடியைப் பற்றி ராகுல் இழிவானமுறையில் பேசினார், அவரது தாயாரை அவமதித்தார், ஆனால் அவர் இதைச்செய்த ஒவ்வொரு முறையும், தாமரை மலர்ந்துள்ளது” என்றார்.
பிகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயககூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் ஆவார்கள் என்று கேள்விக்கு, மகாபந்தன் கூட்டணிக்குள் நடக்கும் “வாரிசு” அரசியலை அமித்ஷா கடுமையாக சாடினார். ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வி யாதவ் பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார் . காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்.பீகாரிலும் சரி, டெல்லியிலும் சரி, அதற்கானஇடம் இல்லை என்பதை நான் இருவருக்கும் சொல்லவிரும்புகிறேன்; டெல்லியில் பிரதமர் மோடி இருக்கிறார், பீகாரில் நிதிஷ்குமார் இருக்கிறார். பிகாரில் நிதிஷ் குமாரின் கீழ் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை அவர் தெளிவாகக் கூறியிருப்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமாரின் “இரட்டை எஞ்சின்” அரசாங்கத்தின்கீழ் கடந்த 11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று அவர் கூறினார்.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |