நாடு முழுவதும் பலபகுதிகளில் இருக்கும் மோசமான சாலை மற்றும் நெடுஞ்சாலை நிலை குறித்து நெட்டிசன்கள் சமூகஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் பேசுகையில், அனைத்து திட்டங்களிலும் வெளிப்படைதன்மை மற்றும் செயல் திறன் சார்ந்த பொறுப்புணர்வை உறுதிசெய்ய கடும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றார்.
இதன் ஒருபகுதியாக சாலைகள்/நெடுஞ்சாலைகள் கட்டுமானத்தில் ஈடுபட்ட/தொடர்புடைய நபர்களின் விவரங்கள் விரைவில் பொதுவில் வெளியிடபடும் என்று கூறி உள்ளார். மேலும், அனைத்து சாலைத் திட்டங்களும் தரம் மற்றும் விபத்துதரவுகளின் அடிப்படையில் செயல்திறன் தணிக்கைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சாலைகள் தேசியசொத்துக்கள், அவற்றை அமைப்பவர்கள் அல்லது நிர்வகிப்பவர்கள் பொதுமக்களுக்கு பதில்சொல்ல கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) புது டெல்லியில் ஏற்பாடுசெய்திருந்த ஸ்மார்ட் சாலைகள் மாநாடு 2025-ல் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “நாடுமுழுவதும் சாலைகள் சரியில்லாமல் இருப்பதற்கு நான் ஏன் பழியை ஏற்கவேண்டும்? சாலை ஒப்பந்ததாரர், பொறியாளர் மற்றும் செயலாளர் விவரங்கள் பொதுமக்களுக்கு பகிரங்கமாக வெளியிடப்படும்” என்றார். “ஒப்பந்ததாரர்கள் செய்யும்தவறுகளுக்கு எப்போதும் நான் ஏன் பழியை ஏற்கவேண்டும் என்றும், மோசமான சாலை வேலைகளை ஒப்பந்தம் எடுத்துவிட்டு மோசமாக செயல்படுபவர்கள் அம்பலப் படுத்தப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
“அரசு எடுக்க உள்ள நடவடிக்கை காரணமாக அமைச்சர், செயலாளர், ஒப்பந்ததாரர், நிர்வாக பொறியாளர் ஆகியோரின் விவரங்கள் மற்றும் அவர்களின் தொலை பேசி எண்களை பொதுமக்கள் பெறுவார்கள். இது பொதுமக்களுக்கு விவரங்கள் கிடைக்க வழிசெய்யும், மேலும் மோசமான வேலைகளைச் செய்பவர்கள் அம்பலப்படுத்தப் படுவார்கள்” என்று நிதின் கட்கரி கூறினார்.
“ஊடகங்கள் ஏன் எப்போதும் என்மீது பழிசுமத்தி எனது புகைப் படத்தை வெளியிட வேண்டும்? ஒப்பந்ததாரர், செயலாளர் ஆகியோரின் புகைப்படத்தை வெளியிடுங்கள், நான் ஏன்பழியை ஏற்றுக்கொண்டு சமூக ஊடகங்களில் பதிலளிக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பினார். “உள்கட்டமைப்பு மக்களை மையமாகக் கொண்டதாக இருக்கவேண்டும், குடிமக்களுக்கு வசதியை உறுதிசெய்ய வேண்டும். இதை ஆதரிக்க, பயணிகளுக்கு உணவு, எரிபொருள், ஓய்வறைகள் மற்றும் பார்க்கிங் போன்ற அத்தியாவசிய சேவைகளையும் வசதிகளையும் வழங்கும் 670 சாலையோர வசதிகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |