பிஹாரின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளில் இந்த மாநிலத்தில் காட்டாட்சிக்கு காரணமானவரின் (லாலு பிரசாத்) படங்களை ஏன் பயன்படுத்த வில்லை என்று பிரதமர் மோடி மறைமுகமாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
கதிஹாரில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் பிரதமர் மோடி இது குறித்து பேசியதாவது: பிஹாரில் ஒட்டப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சுவரொட்டிகளில், பிஹாரில் கட்டாட்சியை கொண்டுவந்த நபரின் படங்கள்(லாலு பிரசாத்) முற்றிலுமாக காணவில்லை. ஒருசில இடங்களில் தொலை நோக்கியில் கூட காணமுடியாத அளவுக்கு மிகச்சிறியதாக உள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மிகப் பெரிய தலைவராக இருக்கும் அவரது முழு குடும்பமும் அரசியலில் ஈடுபட்டுள்ளது. பின்னர் ஏன் அவரது படத்தை பயன்படுத்த வில்லை. லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி தனது சொந்ததந்தையின் பெயரை குறிப்பிட ஏன் தயங்குகிறார். உங்களின் தந்தையின் பெயரை சொல்ல நீங்கள் ஏன் வெட்கப் படுகிறீர்கள்?
பிஹார் இளைஞர்களிடமிருந்து ஆர்ஜேடி மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தவறு என்ன என்று ஆர்ஜேடி தலைமையிலான எதிர்க்கட்சியின் மகாகூட்டணி முதல்வர்வேட்பாளராக களத்தில் இருக்கும் தேஜஸ்வி விளக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |