தவெக விஜய் பாஜக கூட்டணியில் இணைவார் என்ற தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் ஆசை நிறைவேறும் என்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வஉசி சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திரப்போராட்ட வீரர்களை கவுரவப்படுத்துவதில் பிரதமர் மோடி முதல் நபராக உள்ளார்.
அறிவுத் திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்திவிட்டு, அதற்கு எதிராகவே திமுகவினர் பேசியிருக்கிறார்கள். நாட்டு மக்கள் நலனுக்காக திமுகவினர் உச்சநீதிமன்றம் செல்வதில்லை.
கடந்த 5 ஆண்டுகளாகவே மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு போராடி கொண்டிருக்கிறது. வாக்காளர்பட்டியல் திருத்தப் பணிகளை எதிர்த்து வருவாய்துறையினர் தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்தப் போராட்டத்தை திமுக அரசுதான் தூண்டிவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் செயல்படும் விஜய், பாஜக கூட்டணியில் இணைவார் என்று சட்டப் பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார். அவரது விருப்பம் நிறைவேறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் மற்ற கட்சிகளைசேர்ப்பது தொடர்பாக ஜனவரியில் பேசி முடிவு எடுக்கப்படும்.
பலமான கூட்டணியால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடமுடியாது. இதற்கு முந்தைய காலகட்டங்களில் வலுவான கூட்டணி அமைத்திருந்த கட்சிகள்கூட தோல்வியை சந்தித்துள்ளன. மக்கள்நலனில் திமுக அரசுக்கு அக்கறையில்லை. துணை முதல்வர் உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்கு திமுக முயற்சிசெய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |