விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென் இந்தியா

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசா யிகள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் இன்று (நவம்பர் 19) முதல் 21ம் தேதிவரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று மதியம் கோவைக்கு வருகை புரிந்தார். தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய மோடி, “இயற்கை வேளாண்மையை பாடத்திட்டத்தில் ஒரு அங்கமாகவேண்டும். விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென் இந்தியா, பலஅடுக்கு விவசாய முறையை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் சுமார் 35,000 ஹெக்டரில் இயற்கை வேளாண்மை, மாநில அரசுகள் இயற்கை விவசாயம் மீது அக்கறை காட்டவேண்டும். இயற்கை விவசாயம் என்ற புரட்சியை தொடங்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

ஒற்றைப் பயிருக்கு பதிலாக பல்வகைபயிர் வேளாண்மை இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆழமான விருப்பம். இதற்கான கருத்தாக்கம் உத்வேகம் தென்மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்து நமக்கு கிடைக்கின்றது. தென் பகுதிகளுக்கு சென்றோமேயானால் அங்கே பல்அடுக்கு வேளாண்மையை நம்மால் காணமுடியும். இவற்றுக்கு இடையே கீழே ஊடுபயிராக மசாலா பொருட்கள், மிளகு போன்றவை பயிர் செய்யப்படுகின்றன. அதாவது ஒருசின்ன பகுதியிலேயே கூட இத்தனை பயிர்களுக்கும் நிறைவான ஏற்பாடுகளை செய்து பயிர் செய்யமுடியும். இதுதான் இயற்கை வேளாண்மையின் அடிப்படை கோட்பாடு.

இந்த மாதிரியை நாம் இந்தியா நெடுக கொண்டுசெல்ல விரும்புகின்றோம். இதன் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என்று நான் மாநில அரசுகளிடம் வேண்டிக் கொள்ளுகின்றேன். அதாவது எப்படி இந்த வழிமுறைகளை தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமல் செய்வது என்பதை நாம் ஆராய வேண்டும். தமிழ்நாடு விவசாயத்தின் ஒருவாழும் பல்கலைக்கழகமாக இருந்து வருகின்றது. இந்தப் பகுதியிலே உலகத்தின் மிகப் பழமையான இன்றும் கூட செயல்பட்டு வரும் அணைகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இங்கே 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கலிங்கராயன் கால்வாய் உருவாக்கப்பட்டது

நண்பர்களே இயற்கை வேளாண்மையோடு கூடவே நாம் ஸ்ரீஅன்னம் அதாவது சிறுதானியங்கள் பயிர் செய்வதையும் இணைக்க வேண்டும். இவை நம்முடைய இந்தபூமித்தாயின் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பினை அளிக்கின்றது. நம்முடைய தமிழ்நாட்டிலே முருகப்பெருமானுக்கு தேனும் தினைமாவும் நிவேதனப் பொருட்களாக நாம் படைக்கின்றோம். தமிழ்நாட்டிலே கம்பும் சாமையும் கேரளத்திலே ராகிதெலுங்கு பேசும் பகுதிகளிலே சத்யா மற்றும் சுன்னா ஆகியவை பல தலைமுறைகளாக நம்முடைய உணவு பழக்கத்தோடு ஒன்று கலந்தவை.

முயற்சி என்னவென்றால் நமது இந்தசூப்பர் உணவானது உலகெங்கிலும் இருக்கும் சந்தைகள்வரை சென்று சேர வேண்டும் என்பதுதான். மேலும் உலகளாவிய தந்தைகளிலும் இவற்றின் வீச்சினை அதிகரிக்க இயற்கை வேளாண்மை ரசாயனங்கள் இல்லா வேளாண்மை ஆகியவற்றுக்கு மிகப் பெரிய பங்களிப்பு இருக்கின்றது. ஆகையினால்தான் இந்த மாநாட்டிலே இதோடு தொடர்புடைய முயற்சிகள் தொடர்பாகவும் கண்டிப்பாக விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நமது அரசாங்கம் பாரதத்தின் விவசாய பெருமக்கள் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள நிறைய ஊக்கமளித்து வருகின்றது. ஓராண்டுக்குமுன்பாக மத்திய அரசு இயற்கை விவசாய தேசிய நோக்கினை தொடங்கிவைத்தது. இதன் காரணமாக லட்சாப லட்சம் விவசாயிகளால் ஒன்றிணைய முடிந்தது. இது ஏற்படுத்திய ஆக்கபூர்வமான தாக்கத்தை குறிப்பாக மொத்த தென் பரதத்திலும் நன்கு காண முடிகிறது இங்கே தமிழ்நாட்டிலும் கூட சுமார் 35,000 ஹெக்டர் அளவு நிலத்தில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நண்பர்களே இயற்கை வேளாண்மை பாரதத்தின் சொந்தமான சுதேசி கருத்து இதை நாம் எங்கிருந்தோம் யாரிடமிருந்தும் பெறவில்லை இறக்குமதி செய்யவில்லை அதாவது இதுநமது பாரம்பரியத்தில் பிறந்தது நம்முடைய சுற்றுச்சூழலுக்கு உகப்பானது உகந்தது. விவசாயிகள் இயற்கை வழி வேளாண்மையின் பாரம்பரியங்களாக பஞ்சகவ்வியம் ஜீவாமிர்தம் பீஜாமிர்தம் ஆச்சாதன் போன்றவற்றை நிரந்தரமாக உள்வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

நமது அரசாங்கம் பாரதத்தின் விவசாய பெருமக்கள் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள நிறைய ஊக்கமளித்து வருகின்றது. ஓராண்டுக்கு முன்பாக மத்தியஅரசு இயற்கை விவசாய தேசிய நோக்கினை தொடங்கி வைத்தது. இதன் காரணமாக லட்சாப லட்சம் விவசாயிகளால் ஒன்றிணைய முடிந்தது என கோவை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...