தென்னிந்திய இயற்கைவேளாண் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி “பீகார் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறது.தென்னகத்தின் சக்திபீடமாக கோவை உள்ளது. கோவை ஜவுளித்துறை நாட்டிற்கு பங்காற்றுகிறது. இந்த மண்ணின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுதலைவராகி, தற்போது தேசத்திற்கு வழிகாட்டுகிறார்.
இயற்கை விவசாய மாநாடு என் இதயத்திற்கு மிகவும்நெருக்கமானது. பருவநிலை மாற்றத்திற்கு இயற்கை விவசாயம்தான் தீர்வு. நவீன ரசாயனம் நம் மண்வளத்திற்கு கேடு விளைவிக்கும். ஒரு ஏக்கரில் ஒருபருவம் இயற்கை விவசாயம் தொடங்குங்கள். இயற்கை வேளாண்மைக்கு இந்த அரசு எப்போதும் ஊக்கமளிக்கும்.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளின் பேச்சை உணர்ந்துகொள்ள முடிகிறது. புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாய சங்க நிர்வாகி பி.ஆர். பாண்டியன் பேசியதை எனக்கு இந்தியில் அனுப்புங்கள்.” என்றார்.
முன்னதாக பிரதமர் மோடிக்கு மாட்டுவண்டி நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தியதற்காக நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மோடி பேசிக் கொண்டிருக்கும் போது, தனியார் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரிங்கா, மித்ரா ஆகிய இரண்டுசிறுமிகள் பதாகைகளை ஏந்தி மோடியின் கவனத்தை ஈர்த்தனர்.
அதில் ஒரு மாணவி, ”நான் பட்டம்பெறும்போது இந்திய பொருளாதாரம் இரண்டாம் நிலையில் இருக்கும். நான் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது இந்தியாவின் பொருளாதாரம் முதல் நிலையில் இருக்கும்.” என்று கூறியிருந்தார்.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |