அயோத்தி மீண்டும் உலகிற்கு ஒரு முன்மாதிரி

அயோத்தியில் இன்று காவிக் கொடி ஏற்றியது வரலாற்று சிறப்புமிக்க தருணம். இது கொடி அல்ல, இந்தியாவின் கலாசார அடையாளம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றிவைத்த பிறகு மோடி பேசியதாவது: அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றவிழா முன்னிட்டு ஒட்டுமொத்த தேசமும், உலகமும் ராமரின் பக்தியிலும், உணர்விலும் மூழ்கி உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கான ராம பக்தர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அயோத்தியில் இன்று காவிகொடி ஏற்றியது வரலாற்று சிறப்பு மிக்கது. இது கொடிஅல்ல, இந்தியாவின் கலாசார அடையாளம்.

வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர்கொடி காட்டுகிறது. இந்த காவிக்கொடி ஒற்றுமையையும், தெய்வீகத்தையும் விளக்குகிறது. உலகம் முழுவதும் ராமர் உணர்வு பரவிகிடக்கிறது. அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்தநிகழ்வை கண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும்போது, சப்த மண்டபத்திற்கு செல்லவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று அயோத்தி மீண்டும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக அமையும் நகரமாக மாறி வருகிறது.

21ம் நூற்றாண்டின் அயோத்தி மனிதகுலத்திற்கு புதியவளர்ச்சியை வழங்கி வருகிறது. இப்போது அயோத்தி வளர்ச்சி அடைந்துவரும் மாற்றம் இந்தியாவிற்கு முதுகெலும்பாக திகழ்கிறது. ராமர் நம்முடன் இணைவது உணர்ச்சிகள் வாயிலாகதான், வேறுபாடுகள் மூலம் கிடையாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவருக்கு ஒருநபரின் பரம்பரை முக்கியம் கிடையாது. அவர்களின் பக்திதான் முக்கியம். ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த 11 ஆண்டுகளில், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர், பழங்குடிசமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடைந்துள்ளனர். நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047ம் ஆண்டுக்குள், அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சிஅடைந்த இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...