உலகுக்கே கடன் கொடுப்போம்

இந்தியா எடுத்திருக்கும் இந்த புதியமுடிவு, உலக பொருளாதார வரலாற்றிலேயே ஒருபெரிய திருப்புமுனையாக பார்க்கப் படுகிறது. இதுவரை உலக நாடுகள் கடன் வேண்டுமானால் அவசியம் IMF அல்லது உலகவங்கி என்ற இரு கதவுகளையே தட்டி நின்று வந்தன. அந்த இரண்டுமே மேற்குலக அரசியல் கோட்பாடுகளின் கீழ் செயல்படுவதால், நிதிஉதவியைப் பெறும் நாடுகள் பல்வேறு கடுமையான நிபந்தனைகளையும், உள்நாட்டு பொருளாதார மாற்றங்களையும் ஏற்கவேண்டிய சூழ்நிலையில் இருந்தன. அந்தநிலையை முற்றிலும் மாற்றும் வகையில் இந்தியா தனது தேசிய உள்கட்டமைப்பு நிதி மற்றும் மேம்பாட்டு வங்கியான NaBFID-ஐ, Infrastructure Development Bank (IDB) என்ற புதிய பெயரிலும், புதிய நோக்கத்திலும் உலகளாவிய வங்கியாக உருவாக்கியுள்ளது.

இந்தியா இன்று உலகநாடுகளுக்கு கடன் வழங்கும் புதிய வங்கியை தொடங்கியுள்ளது. இது வெறும் வங்கிதொடக்கம் அல்ல; உலக பொருளாதாரத்தை மாற்றும், இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்தும் வரலாற்றுதருணம். இதைச் செய்து காட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தஅமைப்பு இந்தியாவின் உள்நாட்டு திட்டங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், தற்போது இது சர்வதேசளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. IDB என்ற பெயரில் உலக நாடுகளுக்கும் நிதிவழங்கும் வலிமையான நிறுவனம் என்ற புதிய அடையாளம் கிடைத்துள்ளது. இதற்கான காரணம் இந்தியா கடந்த சிலவருடங்களாக உலகளவில் எடுத்துவரும் தன்னம்பிக்கை நிறைந்த பொருளாதார, புவிசார் அரசியல் தடம்.

இந்தியா உருவாக்கியுள்ள IDB முறைஆசிய நாடுகளுக்கு புதிய நம்பிக்கை காட்டியுள்ளது . இந்தவங்கி எந்த நாட்டிடமும் அரசியல் நிபந்தனைகளை விதிக்காது. திட்டம் நடைமுறைக்கு ஏற்றதா, அந்த நாடு உண்மையாக முன்னேற விரும்புகிறதா என்பதை மட்டுமேபார்க்கும். செலவு மிக அதிகமாகும், பயன் குறைவாக இருக்கும் ஆடம்பர திட்டங்களுக்கு இந்தவங்கி கடன் வழங்காது. அதற்கு பதிலாக, மக்களுக்கு நேரடியாக பயன்தரக்கூடிய, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக்கூடிய திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியாவின் டிஜிட்டல் பப்ளிக் உள்கட்டமைப்பு—ஜன் தன, ஆதார், மொபைல் முறை—இவற்றின் அடிப்படையில் சிறியமுதலீடு , ஆனால் தாக்கம் மிகுந்த திட்டங்களுக்கு உதவியும் வழங்கும்.

முக்கியமாக, இந்தவங்கியின் நோக்கம் நாடுகளை அடிமைப் படுத்துவது அல்ல. அவர்களது பொருளாதார, அரசியல் தன்னாட்சியை குலைக்காமல், அவர்களின் வளர்ச்சிக்காக உதவுவது. இதுவே இந்தியா உலகுக்குகாட்டும் பெரிய வித்தியாசமான அணுகுமுறை. யார் உலகத்தை ஆள வேண்டும் என்பதை மேற்குலக நாடுகளே தீர்மானிக்கும் காலத்திற்கு முடிவுகட்ட தொடங்கியுள்ளது. அதற்காகவே IDB-யை உருவாக்கியுள்ளது

இது BRICS அமைப்பின் வலிமையை மேலும் உயர்த்தும். இதன்மூலம், பல நாடுகள் IMF, World Bank ஆகியவற்றின் கடுமையான நிபந்தனைகளிலிருந்து விலகி, “அழுத்தமில்லாத நிதி உதவி” என்ற புதியதிசையைத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் மேற்குலக நாடுகளில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், இதுவரை உலக பொருளாதாரத்தை அவர்கள் கட்டுப்படுத்தி வந்தனர். அந்த கட்டுப்பாட்டில் இந்தியா பேரிடியை இறக்கியுள்ளது.

சுருக்கமாகச் சொல்வதானால், இந்தவங்கி வெறும் நிதிநிறுவனம் அல்ல.இது உலக பொருளாதாரத்தை மாற்றும் புரட்சி.இது இந்தியாவின் தன்னம்பிக்கையை, உலக தலைமை திறனை காட்டும் சாதனை.மோடியின் தலைமையில் இந்தியா இன்று உலக நாடுகளுக்கு உதவும் புதிய பாதையைத் தொடங்கி, “இந்தியா உலகத்தை வழிநடத்தத் தொடங்கியுள்ளது” என்ற வரலாற்று பக்கத்தை எழுதியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...