ஒருபிரச்னையை எழுப்புவதற்காக, மற்ற பிரச்னைகளில் சமரசம் செய்யமுடியாது

தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பு தான், ஆனால் அந்த கோபத்தை நாடாளுமன்றத்தில் வெளிப் படுத்துவது சரியல்ல என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்க்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை காலை தொடங்கிய நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்தம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் ஓம்பிர்லா மறுப்பு தெரிவித்ததால், நேற்று முழுவதும் முடங்கிய மக்களவை, இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளிக்கு இடையே மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜு பேசியதாவது:

”அமைதியான மற்றும் ஒழுக்கமான முறையில் விவாதங்களை நடத்த வேண்டும் என்று நாங்கள் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஒருபிரச்னையை எழுப்புவதற்காக, மற்ற பிரச்னைகளில் சமரசம் செய்யமுடியாது என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.

சில கட்சிகள் அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பது சரியல்ல. தேர்தல்களில் எப்போதும் வெற்றிதோல்வி இருக்கும், ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த தோல்வியால் ஏற்படும் கோபத்தை வெளிப் படுத்துவது சரியல்ல.

எந்தவொரு பிரச்னையையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்க் கட்சி எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...