தமிழக அரசின் ஒத்துழைப்பு இன்மை ரயில்வே திட்டம் தாமதம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தபடும் ரயில்திட்டங்கள் குறித்தும், அதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதிகுறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். ஈரோட்டுக்கு புதியஅகல ரயில்பாதை அமைப்பது உள்ளிட்ட தமிழ்நாட்டில் செயல்படுத்தபடும் ரயில்வே திட்டங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

அரியலூர் – ஈரோடு இடையே திருச்சி, கரூர் வழியாகச்செல்லும் ரயில் வழித்தடம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர், துறையூர், தாத்தையங்கார்பேட்டை, திருச்செங்கோடு வழியாக ஈரோட்டை இணைக்கும் வகையில், அரியலூர், ஈரோடு இடையே 108 கிமீ தொலைவிற்கான புதிய அகல ரயில்பாதை அமைப்பது தொடர்பான திட்டத்தின் தற்போதைய நிலைகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஷ்வரன் எழுப்பியுள்ள கேள்விக்கு பதில்அளித்துள்ள அவர், பெரம்பலூர் வழியாக அரியலூர் – நாமக்கல் இடையே 116 கிமீ தொலைவிற்கு புதியரயில் வழித்தடம் அமைப்பதற்கான விரிவான செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு களஆய்வு நிறைவடைந்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்திற்கான விரிவான செயல்திட்ட அறிக்கை உறுதிசெய்யப்பட்ட பிறகு மாநில அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்த பிறகு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இத்திட்டங்களுக்கான காலவரையறையை துல்லியமாக நிர்ணயம்செய்ய இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 16 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன என மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மொத்தமாக தென்மாநிலங்களில் 66 வந்தேபாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மக்களவையில் கலாநிதி வீராசாமி எம்பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துபேசியவர், கேரளாவில் 6 ரயில்களும், கர்நாடகாவில் 22 ரயில்களும், ஆந்திர பிரதேசத்தில் 12 ரயில்களும், தெலங்கானாவில் 10 ரயில்களும் இயக்கப்படுவதாக தெரிவித்தார்.

ரயில் வழித்தடம், உள்கட்டமைப்பு, ரயில்பாதை, ரயில் பாதைகளை பராமரிப்பதற்கான சேவை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வந்தேபாரத் ரயில் உட்பட புதிய ரயில் சேவைகள் இயக்கப்படுவதாக அவர்கூறினார். புதிய வழித்தடங்களில் வந்தேபாரத் ரயில் சேவைகளை இயக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், ரயில் பயணிகள் உள்ளிட்டோரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து பரிசீலிக்கப்பட்டு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட்

தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வேஅமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மக்களவையில் எம்பி டாக்டர் எம் கே விஷ்ணுபிரசாத் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். 2009-ம் முதல் 2014-ம் ஆண்டு வரை ஓராண்டிற்கு ரூ.879 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2025 – 26-ம் நிதியாண்டில் ரூ.6,626 கோடி (7.5 மடங்கு அதிகம்) ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சென்னை – கடலூர் (179 கிலோ மீட்டர்) புதிய ரயில்பாதை திட்டம் (மாமல்லபுரம் – மரக்காணம் – புதுச்சேரி வழியாக) 2008 – 09-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், புதுச்சேரி அரசு இந்த வழித்தடத்தை விழுப்புரம் – புதுச்சேரியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளையொட்டி அமைக்குமாறும், புதுச்சேரி – கடலூர் இடையே இரட்டை வழித்தடம் அமைக்குமாறும் கோரியிருந்ததாக அவர்கூறினார். இதையடுத்து இதற்கான கூடுதல்செலவை மாநில அரசு ஏற்க வேண்டுமென்று கேட்கப்பட்டிருந்த நிலையில் அதனை ஏற்க இயலாது என்று மாநில அரசு கூறியுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 2025, ஏப்ரல் 1 வரை ரூ.22,808 கோடி செலவில் 1700 கிலோமீட்டர் தொலைவிற்கு 15 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார். இவற்றில் 2025, மார்ச்மாதம் வரை ரூ.7591 கோடி செலவில் 665 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் வழித்தடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளதாக திரு அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். நிலம் கையகப் படுத்துதல் காரணமாக திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய வழித்தடம், அத்திப்பட்டு – புத்தூர் புதிய வழித்தடம், மொரப்பூர் – தர்மபுரி புதிய வழித்தடம், மன்னார்குடி – பட்டுக்கோட்டை புதிய வழித்தடம், தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை புதிய வழித்தடம் ஆகியவற்றிற்கான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...