நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான்

திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள தீபதூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கும் நிலையில், சுவாமிநாதனுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டிருக்கிறது. இந்த முயற்சி தோல்வியில் முடியும் என்று பாஜக அண்ணாமலை கூறியுள்ளார். இது ஓரளவு உண்மைதான் என்றும், ஆனால் திமுகவின் திட்டம்வேறு எனவும் உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.

நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்ற பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், “நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்காக இந்தியா கூட்டணி எம்பிக்கள் கையெழுத்து வாங்கி கொண்டிருக்கிறார்கள். நீதிபதி கொடுத்த தீர்ப்பு திமுகவுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தற்போது இந்தியா கூட்டணி எம்பிக்களிடம் கையெழுத்துவேட்டையை திமுக தொடங்கியுள்ளது. இந்த முயற்சி தோல்வியில்தான் முடியும்” என்று கூறியுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதியை பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் எனில், மக்களவையில் குறைந்தது 100 எம்பிக்களின் ஆதரவு இருக்க வேண்டும். இல்லையெனில் மாநிலங்களவையில் 50 எம்பிக்கள் கையெழுத்துபோட்டு கொடுக்க வேண்டும். இப்படி சப்போர்ட் கிடைத்தாலும் நீதிபதியை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட முடியாது. பதவி நீக்கம் தீர்மானம் கொண்டுவருவதற்காகத்தான் இந்தஆதரவு அவசியம். தீர்மானம் கொண்டு வந்த பின்னர் அதை மூன்று பேர் கொண்ட குழு விசாரிக்கும்.

விசாரணை முடிந்தவுடன் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில், 3ல் 2 பங்கு எம்பிக்கள் ஆதரவுதெரிவித்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியில் அவர்தான் பதவிநீக்கம் செய்வார். இப்படித்தான் உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும்.

மக்களவையில் இந்தியா கூட்டணியின் எம்பிக்களின் எண்ணிக்கை 235. மூன்றில் இரண்டுபங்கை விட இது குறைவு. 362 எம்பிக்கள் இருந்தால்தான் அது 3ல் 2 பங்கு என்று கருதமுடியும். எனவே தீர்மானம் கொண்டு வந்தாலும் வாக்கெடுப்பில் நிச்சயம் தீர்மானம் தோல்வியடைந்து விடும். இதைத்தான் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...