அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால், இந்து அமைப்புகள் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவின் செயல் பெரும் பேசுபொருளாகி உள்ளது .

மேலும், இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும்தூணில் தீபம் ஏற்றச் சொல்லி உத்தரவிட்டது சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது என்று திமுகவைச்சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையில் விவாதித்து வருகின்றனர். பாஜக எம்.பிக்கள் இந்து அமைப்பினருக்கு ஆதரவாக விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக அரசைக் கண்டித்துப் பேசியுள்ளார் பாஜகவின் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்.

இதுகுறித்து பேசிய அனுராக் தாகூர், “இந்தியாவில் ஒருமாநிலம் சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சனாதன தர்மத்தின் எதிரியாக இருந்து வருகிறது.

அன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்காக நீதிகேட்டு நீதிமன்றம் சென்றோம். இன்று திருப்பரங்குன்றம் மலைஉச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.

ஆனால், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியிருந்தும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகைதீபம் ஏற்றவிடாமல் தடுத்திருக்கிறது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக-ஸ்டாலின் அரசு.

நீதிமன்றம் அனுமதிகொடுத்தும், ஸ்டாலின் அரசு ஏன் மலை உச்சியில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்து, தீபம் ஏற்றச்சென்றவர்கள் மீது தடி அடி நடத்தியது?”

“ஸ்டாலின் அரசே நீதிமன்ற உத்தரவைமீறி நடந்து கொண்டது ஏன்? கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் ஏற்றஅனுமதிக்காதது ஏன்? இதற்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்,” என்று மக்களவையில் கேள்வி எழுப்பி பேசியிருக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...