டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள்

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் விவாதிக்கும் நபர்கள், ஊடகங்கள் மத்தியில் சர்வதேச நிகழ்வுகள் குறித்து பார்ப்பது அவசியம் ஆகிறது.
● கடந்த ஓராண்டில் இந்தியா, சீனா, பிரேசில், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களிடம் இருந்த டாலர் கடன் பத்திரங்களைப் #USTreasuryBonds பெருமளவு விற்றுள்ளன.
● US Treasury Bonds / Dollar Bonds என்பது அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரம். இவற்றை Bills (ஓராண்டு), Notes (2 முதல் 10 ஆண்டுகள்), Bonds (20 முதல் 30 ஆண்டுகள் வரை) என மூன்றாகப் பிரிக்கிறார்கள்.
● நமது ரிசர்வ் வங்கி இந்த பத்திரங்களை வாங்கி வைத்தால் ஆண்டுக்கு 4% முதல் 4.75% வரை வருமானம் ஈட்டும். அமெரிக்க அரசின் உறுதி (Sovereign Guarantee), பொருளாதார பலம், டாலரின் சர்வதேச டிமாண்ட் இந்த வருமானத்தை முடிவு செய்கிறது. இவை எல்லாம் சாதகமான அம்சங்கள்.
● பாதகங்கள் என்று பார்த்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பத்திரங்களை பயன்படுத்த முடியாமல் ரஷ்யா சிரமப்பட்டு வருகிறது. Sovereign Guarantee ஐ அரசே மீறுகிறது.
● ரஷ்யா போல ஈரான் உட்பட வேறு சில நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து சர்வதேச வர்த்தகத்தில் அவர்களின் செல்வாக்கைக் குறைத்து வருகிறது.
● #SWIFT போன்ற சர்வதேச கரன்சி பரிமாற்றங்களிலும் முட்டுக்கட்டை போடுகிறது. லண்டன் மற்றும் நியூ யார்க்கில் உள்ள சர்வதேச பணப்பரிமாற்ற வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள டாலர்களைத் தொட முடியாத வண்ணம் உள்ளூர் அரசின் அதிகாரம் வழியாகத் தடைகள் விதிக்கப்படுகின்றன.
● அண்மையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் இயங்கும் நயாரா #Nayara (ரஷ்யாவுடன் இணைந்து நாம் இயக்கும் பெட்ரோலிய நிறுவனம்) நிறுவனத்திற்கு Cloud Service Support ஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அமெரிக்க அரசின் உத்தரவைக் காட்டித் தொழிலில் நேர்மையில்லாமல் அது நடந்து கொள்கிறது.
● அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் காரணமாக சீனா கடந்த சில ஆண்டுகளாகத் தன் கையிருப்பில் இருந்த டாலர்களை விற்று வருகிறது. சுமார் 200 பில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.16 இலட்சம் கோடி) அளவு கையிருப்பை அது குறைத்து விட்டது.
● சீனா மட்டுமல்லாது நமது ரிசர்வ் வங்கியும் சுமார் 50 பில்லியன் டாலர்கள் (ரூ.4 இலட்சம் கோடி) அமெரிக்க டாலர் பத்திரங்களை கடந்த ஓராண்டில் விற்று விட்டது.
● சீனா, இந்தியா மட்டுமின்றி பிரேசில், சவுதி ஆகிய நாடுகளும் இதனைச் செய்வது முக்கியத்துவம் பெறுகின்றது.
● இன்று ரஷ்யா, ஈரானுக்கு நடப்பது நாளை #BRICS உட்பட பல்வேறு நாடுகளுக்கும் நடக்கும் என்று நாம் எண்ணுகிறோம்.
● முதற்கட்டமாக நாம் இங்கிலாந்தில் அடமானம் வைத்திருந்த 200 டன் தங்கத்தை சென்ற ஆண்டு இந்தியாவிற்கு கொண்டு வந்து விட்டோம். ஒரே நாளில் நமது அடமானத்தை மீட்க முடியாமல் போகலாம் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.
● படிப்படியாக டாலர் சேமிப்பைக் குறைத்து மாற்று வழிகளில் நமது சேமிப்பை அதிகரிக்கிறோம். அதில் முக்கிய சொத்தாக தங்கம் உருவெடுத்துள்ளது.
● வருங்காலத்தில் டாலர் அல்லாத பன்னாட்டு வர்த்தகம் செய்ய வாய்ப்புகளைத் தேடி வருகிறோம். ரூபாய், யுவான், ரூபிள், திர்ஹாம், பிரேசிலின் ரியல் என இருநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தவும் முயற்சி செய்கிறோம்.
● #Vostro Accounts – வெளிநாட்டு வங்கிகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய இந்தக் கணக்குகளைத் துவக்க ரிசர்வ் வங்கி ஆறு மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. இதற்கு இந்தியாவில் கிளை இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தையும் தளர்த்தியுள்ளது.
● வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்தால் அப்பணத்தை ரூபாய் கணக்கிலேயே இந்தியாவில் முதலீடு செய்யலாம் என்றும் சலுகை அளித்துள்ளது.
● நேற்று ரூபாய் மூலம் ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு பரிமாற்றத்தை ஈடு செய்ய கூடுதலாக மூன்று மாதங்கள் (eg 15 for $ vs 18 for ரூ) அவகாசம் அளித்துள்ளது.
● சரி, #BRICS நாடுகள் டாலரைத் தொடர்ந்து விற்று வந்தால் டாலர் மதிப்பு ஏன் குறையவில்லை. அமெரிக்கச் சந்தை ஏன் விழவில்லை என்று கேள்வி எழுகிறது. இங்கு தான் அமெரிக்க லாபி வேலை செய்கிறது.
● அமெரிக்க டாலரை நாம் விற்றாலும் இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற வேறு சில நாடுகள வாங்க அமெரிக்க மறைமுகமாக நிர்பந்திக்கிறது.
● Treasury International Capital என்று இணையத்தில் தேடினால் அமெரிக்க டாலர் கடன் பத்திரங்களை யார் வாங்குகிறார்கள் என்கிற விபரம் தெரிய வரும்.
● இந்த TIC Data வில் வெளிப்படும் உண்மை என்னவெனில் கடன் பத்திரங்களை வாங்குவது U.K அரசு அல்ல, அங்குள்ள சர்வதேச நிதி நிறுவனங்கள் என்று தெரிய வருகிறது.
● பெல்ஜியத்தில் உள்ள மிகப்பெரிய ICSD ( நம்ம ஊர் NSDL, CSDL மாதிரி சர்வதேச Demat கணக்குகளை கையாளும்) நிறுவனம் #Euroclear வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
● இதே போல வரி சொர்க்க நாடான #CaymanIslands இல் இருந்து பெருமளவு டாலர் கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
● இவை எல்லாம் பங்குச்சந்தை வணிகர்கள் போல, நீண்ட கால முதலீட்டாளர்கள் அல்ல. தேவையான இலாபம் கிடைத்தவுடன் குறுகிய காலத்தில் விற்றுச் சென்று விடுவார்கள்.
● அமெரிக்கா இந்த விஷயத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை.
● மேலும் திரு.டிரம்ப் அறிவித்துள்ள கடன் அட்டைகள் (Credit Card Interest) மீதான வட்டிக் குறைப்பு (<10% from 24-36%) அமெரிக்க வங்கிகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
● வங்கிகள் தங்களது கடன் அட்டை வணிகத் தொகையை சந்தையில் பங்குப் பத்திரங்களாக விற்று வருகின்றன. டாலர் பத்திரங்களைப் போல இதுவும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
● நாளை அதிரடியாக வட்டியைக் குறைத்தால் அமெரிக்க வங்கித் துறை ஆட்டம் கண்டு விடும்.
● அமெரிக்க அரசின் கடன் மீதான வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.1 இலட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்ந்து வருகிறது. வருமானத்தை விட செலவு அதிகரித்துப் பற்றாக்குறை கூடியுள்ளது கவலைக்குரிய அம்சம்.
● அமெரிக்க அரசு தனது நம்பகத்தன்மையை இழந்து வருவதால், ரிசர்வ் வங்கி போன்ற நாட்டின் தலைமை வங்கிகள் டாலருக்கு மாற்றாகத் தங்கம், உள்நாட்டு கரன்சி வர்த்தகம், கச்சா எண்ணெய் போன்ற மாற்றுப் பாதையில் கவனம் செலுத்துகின்றன.
● அமெரிக்கக் கடன் பத்திரங்கள் மிகவும் ரிஸ்க்கானவை என்று சீனா மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் முடிவெடுப்பது மிகவும் முக்கியமான விஷயம்.
● விசா, மாஸ்டர் கார்டுக்கு மாற்றாக நாம் #Rupay, #UPI, #RTGS என நிதிக் கட்டமைப்பை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் மாற்றியமைத்துள்ளோம்.
● #SWIFT க்கு மாற்றாக #BRICSpay, சீனாவின் #CIPS, Project #mBridge என பல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன.
உங்கள் கண்களைத் திறந்திருக்கும் போதே வெண்ணெய் என்று ஏமாற்றி சுண்ணாம்பு வைக்கும் பேர்வழிகள் சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும் உண்டு. தீவிரமான வாசிப்பு, ஒவ்வொரு எதிர்மறைச் செய்திக்கும் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வம் இல்லை என்றால் நீங்கள் விட்டில் பூச்சிகளாகத் தான் மாட்டிக் கொள்வீர்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...