ஒரு சிங்கம் சும்மா நிக்குதுன்னா?

ஒரு சிங்கம் சும்மா நிக்குதுன்னா; அதுக்கு வேட்டையாட தெரியாதுன்னு எடுத்துக்க கூடாது; அது அடுத்த தாக்குதலுக்கு ரெடியாக போகுதுன்னு அர்த்தம்..!

மோடியை சாதாரணமாக நினைத்த அதிபர் டிரம்புக்கு புகட்டப்பட்ட பாடம்; 500% வரி போடுற மிரட்டலுக்கு பணியிற நாடு இந்தியா இல்ல; 30% வரியிலயே ‘ரெட் ஸ்டேட்ஸ்’ தூக்கத்தை கெடுக்கிற ஆளுமையான நாடு.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தற்போதைய அரசியல் நகர்வுகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. கடந்த 2025 ஆணடு பிப்ரவரி மாதம் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, டிரம்ப் தனது வழக்கமான பாணியில் தனிப்பட்ட நட்புறவை பயன்படுத்தி ஒரு விரைவான வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முயற்சி செய்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் குழுவினர் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் என்று கூறிவந்த போதிலும், பிரதமர் மோடி ஒப்பந்தங்களை இறுதி செய்யும் விஷயத்தில் மிகவும் நிதானமாக செயல்பட்டார்.

தனிப்பட்ட நட்புக்கு அப்பால், நாட்டின் இறையாண்மை மற்றும் நீண்டகால பொருளாதார நலன்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து, நிறுவன ரீதியான மற்றும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களுக்கே இந்தியா முக்கியத்துவம் அளித்தது.

இது டிரம்பின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்ததால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் தொடக்கத்திலேயே ஒரு விதமான இழுபறி நிலை உருவானது.

ஏற்கனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது வெளிப்படையாக உலக நாடுகளுக்கு தெரிந்தது. எல்லையில் துப்பாக்கி சூடு நிறுத்தப்படுவதை முறைப்படி இந்தியா அறிவிப்பதற்கு முன்பே, அதிபர் டிரம்ப் தனது செல்வாக்கை நிலைநாட்ட விரும்பி அரை மணி நேரம் முன்னதாகவே அது குறித்து ட்வீட் செய்தது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஜி-7 உச்சிமாநாட்டின் போது மோடியை சந்திக்காமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் தவிர்த்ததும், பின்னர் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க டிரம்ப் அழைத்த போது மோடி அதனை நிராகரித்ததும் ஒரு பனிப்போரை உருவாக்கியது.

ஒரு கட்டத்தில் நமது பிரதமர் மோடி டிரம்பின் நேரடி தொலைபேசி அழைப்புகளை தவிர்த்தார். ஒரு முறையான தூதரக இடைவெளியை பேண தொடங்கினார். டிரம்பின் தன்னிச்சையான மற்றும் கணிக்க முடியாத அணுகுமுறைக்கு இந்தியா ஒரு மௌனமான மற்றும் உறுதியான பதிலடியை கொடுக்கத் தொடங்கியது.

சர்வதேச அளவில் இந்தியா தன்னை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக காட்டிக்கொள்ளாமல், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் தனது தொடர்புகளை மேலும் பலப்படுத்தியது. குறிப்பாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் சமீபத்தில் புதின் இந்தியாவிற்கு வருகை தந்தது ஆகியவை அதிபர் டிரம்பின் குழுவினருக்கு ஒரு பலமான எச்சரிக்கையாக அமைந்தது.

அமெரிக்கா கொடுத்து வரும் தொடர் அழுத்தங்களுக்கு பணியாமல் இந்தியா தனது பன்முக கொள்கையை தொடர்ந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் 500 சதவீத வரி விதிப்பு போன்ற மிரட்டல்களை விடுத்த போதிலும், இந்தியா தனது தரப்பில் இருந்து மிகவும் அமைதியான முறையில் அதே சமயம் அமெரிக்காவுக்கு எதிரான வலிமையான முறையில் பொருளாதார ரீதியான எதிர் நடவடிக்கைகளை தொடங்கியது.

இந்தியாவின் மிகப்பெரிய பதிலடி 01.11.2025- அன்று அரங்கேறியது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மஞ்சள் மற்றும் பருப்பு வகைகள் மீது இந்தியா 30 சதவீத வரியை விதித்தது.

இது விவசாய துறையில் இந்தியாவின் நலன்களை காப்பதற்கான பிரதமர் மோடி எடுத்த உறுதியான மற்றும் வலிமையான முடிவாகும்.
இந்தகயாவின் இந்த கூடுதல் வரி விதிப்பு அமெரிக்காவில் டிரம்ப் அரசுக்கு பெரும் ஆதரவு தளமாக விளங்கும் ‘ரெட் ஸ்டேட்ஸ்’ என்று அழைக்கப்படும் மாகாணங்களின் விவசாயிகளை இது நேரடியாக பாதித்தது.

இந்தியா தனது விவசாய சந்தையை அமெரிக்காவிற்காக திறந்துவிடாது என்பதை தங்களது அதிரடி வரி விதிப்பின் மூலம்நிரூபித்தது. இந்த வரி விதிப்பு குறித்து இந்தியா எந்தவித ஆரவாரமான பொது அறிவிப்புகளையும் வெளியிடாமல் அமைதியாக செயல்படுத்தியதால், டிரம்பால் உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை.

மேலும், அமெரிக்காவின் எந்தவொரு அழுத்தங்களுக்கும் பணியாமல் நீண்டகால எரிவாயு ஒப்பந்தங்களை தவிர்த்து, குறுகிய கால ஒப்பந்தங்களையே இந்தியா மேற்கொண்டது. ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல்களால் அமெரிக்காவின் எரிவாயு விற்பனை பாதிக்கப்படும் சூழலில், இந்தியாவின் இந்த முடிவு டிரம்பிற்கு பெரும் பொருளாதார சவாலாக மாறியுள்ளது.
அதேபோல், பாதுகாப்பு துறையில் அமெரிக்க விமானங்களுக்கு பதிலாக பிரேசில் மற்றும் ரஷ்யாவின் விமானங்களை தேர்வு செய்யும் இந்தியாவின் அதிரடியான நகர்வுகள் அமெரிக்க பாதுகாப்பு துறையை யோசிக்க வைத்துள்ளது.

இது சம்பந்தமாக இந்தியா எந்தவொரு அறிவிப்பும் செய்யாமல் மேற்கொண்ட தந்திரமான அழுத்தம் ஆகும். இது அதிபர் டிரம்பின் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இறுதியாக, இந்தியாவின் இந்த வெளியுறவுக் கொள்கை என்பது உடனே எதிர்வினை காட்டாமல், உணர்ச்சிவசப்படாமல், நிதானமாக அதே சமயம் வலிமையாக பதிலடி கொடுப்பதன் மூலம் அமெரிக்கா போன்ற பெரிய பொருளாதார நாடுகளிடம் இந்தியா தனது மதிப்பை நிலைநாட்டுகிறது.
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கொள்கைகளை கேலி செய்தவர்கள் கூட, தற்போது இந்தியாவின் இந்த மௌனமான வெற்றியை பார்த்து வியக்கின்றனர். இந்தியா தனது சோதனையான காலங்களிலும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியிலும் தனது நலனை எப்படி காத்து கொள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகுந்த கவனமுடன் செயல்படுகின்றார் என்பதை உலக நாடுகள் வியந்து பார்க்கின்றன

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...